வியாழன், 24 டிசம்பர், 2020

கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான்.

இயக்குனர் கே.பாலச்சந்தரின் இறப்பினை முன்னிட்டு 24 டிசம்பர் 2014 அன்று ஃபேஸ்புக்கில் எழுதிய பதிவு. 

கே.பி-யின் இரங்கல் நிகழ்வுத் தொகுப்புச் செய்திகளில் கே.பி அறிமுகப்படுத்திய பலரின் பெயர்களை முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் வரிசையாகச் சொன்னபோது அதில் கமல், ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பெயரும் வந்தது. அதைப்பார்த்து வீட்டில் என்னது? பாலச்சந்தரா? மணிரத்னம் தானே? என்றார்கள். 

அறிமுகப்படுத்தியது என்பது இரண்டு மீனிங்கில் வரும். ஒரு படைப்பாளியாக ஏ.ஆர்.ரஹ்மானை நமக்குக் காட்டியது "மணி"யாக இருக்கலாம். ஆனால் ஒரு தயாரிப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மானின் திரைப்பிரவேசத்துக்கு பச்சைக்கொடி காட்டி முதல் சினிமாச் சம்பளம் கொடுத்த முதலாளி கே.பி தான். 

ஒருமுறை மணிரத்னமும் கே.பி-யும் பேசிக்கொண்டிருக்கும் போது (எமனெடுத்துச் சென்ற கணவன் சத்தியவானின் உயிரை அவனிடமே போராடி திரும்பக் கொண்டு வந்த சாவித்ரி என்ற புராணத்தின் மாடர்ன் வெர்ஷனான) ரோஜா அவுட்லைனை சொன்னாராம் மணி. உடனே இதே போல ஒரு அவுட்லைன் நானும் வச்சிருக்கேன் என்றாராம் கே.பி. ஆனால் கடத்தப்படும் ஹீரோவின் வீட்டில் நிகழும் நிகழ்வுகளை காட்டலாம் என்றிருந்தேன் என்றிருக்கிறார். 

அப்ப நீங்களே பண்ணுங்க சார். நல்லாயிருக்கும் என்றாராம் மணி. இல்லயில்ல. நீ அவுட்டோர்ல வச்சு நல்லா பண்ணுவ, உன் ஸ்டைலும் நல்லாயிருக்கும், நீயே பண்ணு. நான் தயாரிக்கிறேன் என்றாராம் பாலச்சந்தர். ரோஜாவுக்கான முதல் விதை விழுந்தது அங்கே தான். இயக்குனராக மட்டுமின்றி ஒரு தயாரிப்பாளராகவும் சக்ஸஸ் கொடுத்தவர் கே.பி. ரோஜா மட்டுமல்லாமல் "கவிதாலயா"வின் பல படங்கள் வெற்றிப்படங்களே. 

கே.பி.ரிப்.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக