சில நேரங்களில் optimistic என்பது பல நேரங்களில் over confidence ஆகப் போய்விடுகிறது. சிலர் பல நேரங்களில் ஓவர் optimistic ஆகத் தன்னைப் பற்றி நினைத்துக் கொண்டு, அறியாமையால் தான் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயாராக இருப்பதில்லை. தன் கன்டென்ட் இல், டெலிவரியில் வரும் தவறுகளைக் கூடத்திருத்திக் கொள்ளத்தயாராக இல்லை. பல நேரங்களில் அது over confidence ஆக முடிந்து போய் விடுகிறது.
நண்பர்கள் - டிரெயினர்கள் சிலரை இப்படிப் பார்க்கிறேன். வருத்தமாக இருக்கிறது. வேறு துறையில் இப்படி இருந்தால் தவறில்லை. ஆனால் டிரெயினர்கள் இப்படி இருந்தால், அது learner களிடம் அதே தவறுடன் தானே போய்ச்சேரும்?
put - putted - putted என்று எழுதிப் போடுகிறார் ஒருவர்
what actually ur doing sir? என்று கேள்வி கேட்கிறார் ஒருவர்
"கண்னீர்" என்று எழுதுகிறார் ஒருவர்
"நம்பிகை" என்று ஒருவர்.
25 நவம்பர் 2016 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக