சனி, 14 நவம்பர், 2020

டீமானடைசேஷனை முன்னிட்டு - பதிவு 3

டீமானடைசேஷனை முன்னிட்டு 14 நவம்பர் 2016 அன்று ஃபேஸ்புக்கில் பதிவிட்ட சில கருத்துக்கள். 

------------------------------------------ 

(பி.ஜே.பி, மோடி, ஏழைகள் பாவம் அது இது என முன் முடிவுகளுடன் படிக்க வேண்டாம்) 

------------------------------------------

கேள்வி பதில் 3

"கியூவுல நின்னு மக்கள் கஷ்டப்படுறாங்க"
"பதில் 1 - வங்கி நடைமுறைகளை மிக மிக மிக எளிதாக்கிய பிறகு வங்கிக்குப் போவது குறைந்து விட்டது. ஆனால் பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன் இதே போல கியூவில் தானே நின்னோம்? இன்றைக்கும் பெரிய வங்கிகளில் டோக்கன் வாங்கிக் கொண்டு இரண்டு மணி நேரத்துக்கு நின்று தானே பல வேலகள் நடக்கின்றன. அதெல்லாம் உங்க கண்ணுல இத்தனை நாள் படலையா?"
"பதில் 2 - தந்தவர்
Latha Pondy
அந்த காலத்தில் ரேஷன் que வில் நின்று கிட் வந்ததும் மண்ணெண்ணெய் தீர்ந்து ட்டதுன்னு சொல்வாங்களே அதை விட வா கஷ்டம்ப இருந்துவிடப்போகிறது பெரிசுகள இந்த generation க்கு சொல்லி பொறுமை காக்க பழக சொல்லணும்"
"பதில் 3 -இன்றும் ஏழ்மையான பகுதிகளிலும், கிராமங்களிலும் ரேஷனுக்கு மணிக் கணக்கில் கியூவில் அப்படித்தான் நிற்கிறார்கள்"
"கையில காசு இல்ல. சாப்பாட்டுக்கு வீட்டுல பிள்ளைங்க உண்டியலை உடைக்க வேண்டியதா போச்சு"
"தப்பொன்றும் இல்லை. ஸேவிங்க்ஸ் என்றைக்குமே காப்பாற்றும், இன்றைக்கு உண்டியல் வடிவத்தில். நாளை வேறொரு சந்தர்ப்பத்தில் தங்க நகை. வங்கிப் பிரச்சினை தீர்ந்ததும் வங்கி சேமிப்பும் கூட (நான் கூட சாமி உண்டியலில் கை வைத்திருக்கிறேன்)"
"சிறு, குறு நிறுவனங்கள் அனைத்தும் முடங்கி விட்டன"
"பதில் 1 - அனைத்தும் அல்ல. சமாளிக்கத் தெரியாதவையும். கேஷ் டிரான்ஸாக்ஷனை நம்பியிருந்தவை மட்டுமே"
"பதில் 2 - தொடர் மழை, அடை மழை, வெள்ளம், இரண்டு வருடம் விடாத மின்வெட்டு, இறக்குமதி வரி, ஏற்றுமதி வரி மாற்றம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, ராஜீவ், இந்திரா படுகொலைகள், எம்.ஜி.ஆர் மரணம், ஜெயலலிதா அரஸ்ட், புயல், என நிறுவனங்கள் முடங்கக் காரணமா இல்லை?
"தினக் கூலிகள் கஷ்டப் படுறாங்க"
பதில் 1 - 500, 1000 நோட்டுகளில் கூலி வாங்கும் தினக்கூலிகள் மிகக் குறைவு. 300, 250, 400 போன்ற டினாமினேஷன்களில் வாங்குவோருக்கு 100 ரூபாய் நோட்டுக்களில் தான் பட்டுவாடா நடக்கும். நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.
பதில் 2 - டெம்ப்ளேட் வார்த்தைகளைப் போட்டு எழுதும் திறமை எல்லாருக்கும் வந்து விட்டது. தினக்கூலிகள், பாமரர்கள், கஷ்டம், விவசாயிகள், பாடு படுகிறார்கள், இயல்பு நிலை, கட்டில், தொட்டில், மஞ்சம், நெஞ்சம், ப்ளா, ப்ளா, ப்ளா,
"நாளொன்றுக்கு 4,000 ரூபாய் தான் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்க முடியும் (18-ம் தேதி வரை நாளொன்றுக்கு ரூ. 2000, அதன் பிறகு ரூ. 4,000)"
"பதில் தந்தவர்
மாயவரத்தான் கி ரமேஷ்குமார்
- அதில் என்ன தவறு? நாளொன்றுக்கு 4,000 ரூபாய் மட்டும் தான் உபயோகிக்க முடியும் என்று கட்டுப்பாடு விதித்தால் தான் தவறு. 4,000 ரூபாய் ரொக்கமாக எடுக்கலாம். அதைத் தாண்டி தான் உபயோகிப்பேன் என்றால் ஆன்லைன் ட்ரான்ஸ்ஃபர் செய்யுங்கள்.. செக் கொடுங்கள்.. POS உபயோகியுங்கள்"
"மைண்ட் வாய்ஸ் - பல கோடி ரூபாயை நான் கையில் தான் வைத்துக் கொண்டிருப்பேன். என்னைக் கேள்வி கேட்கக் கூடாது"
"பதில் - மாயவரத்தான் - என்று கேட்பது உங்களுக்கு சரி என்றால், வங்கியிலிருந்து இவ்வளவு தான் பணமாக தர முடியும் என்று அரசாங்கம் உத்தரவிடுவதில் என்ன தவறு? பிடிக்கவில்லையென்றால் ‘அரசாங்கத்தின் பணத்தை நான் உபயோகிக்க முடியாது’ என்று தூர வீசிவிட்டுப் போங்களேன்யா. யாரு வேண்டாம் என்று சொன்னார்கள்?
அல்லது வேறு எங்கு உங்கள் இஷ்டப்படி எல்லாம் பணத்தை கையில் வைத்துக் கொண்டு புழங்கலாம் என்று சலுகை தருகிறார்களோ, அங்கேயும் செல்லலாம் - அவர்கள் வரவேற்றால்"
தொடரும்
கீழே வங்கி ஊழியர் தினேஷ் அவர்களின் கமெண்ட் ஐப் படிக்கவும்.
(Can withdraw 10000 perday... Now it increased... 4000 fr only exchange.... )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக