டீமானடைசேஷனை முன்னிட்டு 14 நவம்பர் 2016 அன்று ஃபேஸ்புக்கில் பதிவிட்ட சில கருத்துக்கள்.
(பி.ஜே.பி, மோடி, ஏழைகள் பாவம் அது இது என முன் முடிவுகளுடன் படிக்க வேண்டாம்)
மருத்துவச் செலவு, காய்கறி மார்க்கெட் போன்ற இடங்களில் கொஞ்சம் தடுமாறுகிறார்கள். அந்த 5 சதம் பேரை விட்டு விட்டுப் பார்த்தால் மற்றவர்கள் புலம்புவதில் அர்த்தமே இல்லை.
(டிஸ்கிளெய்மர் - எனக்கு அரசியல் என்றாலே வேப்பங்காய். நான் யாருக்கும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு கிடையாது)
கல்யாணம் போன்ற மிக அத்தியாவசியமான செலவுகளைச் செய்பவர்களுக்கும் கொஞ்சம் தடுமாற்றம் தான். ஆனால் என் பர்சனல் கருத்து கல்யாணத்திற்கான பொருட்கள் வாங்கும் போது கூட கடைக்காரரின் வங்கி அக்கவுண்ட் டுக்கு பணம் அனுப்பிப் பொருள் வாங்க முடியும். நாலரை வருடம் முன்பு என் கல்யாணத்தின் போதே பல இடங்களில் கேஷ்லெஸ் பணம் டிரான்ஸ்பர் செய்தேன். இங்கே பிரச்சினை என்னவென்றால் பலரும் பில் போடாமல் வியாபாரம் செய்வதே. பில் போடாமல் வியாபாரம் செய்யும் நீ, ஆல்ரெடி அரசாங்கத்தை ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கிறாய். அப்போ அவதிப் படு.
சில கேள்வி பதில்கள்
"நான் நைட்டு அஞ்சு ஏ.டி.எம் போனேன். ரெண்டு கி.மீ சுத்துனேன்"
"கபாலிக்காகவோ, வேதாளத்துக்காகவோ, ரெமோவுக்காகவோ கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கலை? வாங்கினதை விலாவாரியா ஸ்டேட்டஸ் போடலை?"
"இல்லியே. நான் போகலை. நான் டாரண்ட்ல டவுன்லோட் பண்ணியில்ல பார்த்தேன்"
"இது வேற டிபார்ட்மெண்ட். ஆபீஸர்ஸ் இவரை திருட்டு பிரிண்ட் பார்த்த கேஸூல புக் பண்ணுங்க"
"நான் படத்துக்கே போகலை. நான் கஷ்டப்படுறேனே?"
"மாரியம்மன் கோவில் பண்டிகைக்கோ, வைகுண்ட ஏகாதசிக்கோ பெருமாள் கோவிலில் அனுமார் வால் நீளக் கியூவில் நிற்கலை?"
"நான் நாத்திக வாதி. நான் அதுக்கும் போனதில்லை, பேங்குல தான் என் நேரம் வேஸ்ட் ஆகுது"
"பத்து வருடம் முன்னால் இதே போல பேங்க் வேலைகளுக்குக் கால் கடுக்க நிற்கவில்லையா? இப்போது ஒரு இரண்டு முறை நிற்கலாமே?"
"பேங்க் அக்கவுண்ட் இல்லாம நெறைய பேர் கஷ்டப்படுறாங்களே"
"கடந்த இரு வருடங்களாகவே அரசு, வீட்டில் இருந்த பெருசுங்களைக்கூட அள்ளிக் கொண்டு போய் வங்கியில் கணக்கு துவக்கிக் கொடுத்தார்கள், என் தந்தையும் அதில் ஒருவர். பேங்க் அக்கவுண்ட் இல்லையென்றால் அது உடான்ஸூ"
"இல்லையே, எனக்குத் தெரிஞ்சு இன்னும் நிறைய பேர் அக்கவுண்ட் இல்லாம இருக்காங்களே, அவங்க பாவம் இல்லையா?"
"நேற்று வரை அவனைப் பற்றிக் கவலைப்படாத நீ, இப்போ அவர்களைப் பற்றிப் பேச ரைட்ஸ் இல்லை"
"அம்பானியையும், அதானியையும் விட்டு விட்டு ஏழைகளைக் கஷ்டப் படுத்துறார் மோடி"
முதல் பதில் - அம்பானியையும், ஏழைகளையும் ஏன் கம்பேர் செய்ய வேண்டும்?
பதில் 2 - வேறொருவரின் பதிவில் படித்தது. "டாட்டா, பிர்லா, ரிலையன்ஸ், அதானி, போன்ற பெரு நிறுவனங்களை மூடினா, அதுலயே நேரடியாகவும், அவற்றைச் சார்ந்தும் 80 சதவீதம் பேருக்கு வேலை போகும். அதிலே இன்னும் பெரிய கலவரம் வரும். பரவல்லயா?
பதில் 3 - கம்பெனிகள் என்பவை வரையறுக்கப் பட்ட சட்டதிட்டங்களின் மூலம் இயங்குபவை. அவர்கள் எல்லாவற்றையும் அக்கவுண்டில் கொண்டு வருபவர்கள். (சட்டத்தில் உள்ள சந்து பொந்துகளை உபயோகித்து சம்பாதிப்பது உண்டு தான். ஆனால் அதை இங்கே கம்பேர் செய்யக் கூடாது)
தொடரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக