சனி, 14 நவம்பர், 2020

டீமானடைசேஷனை முன்னிட்டு - பதிவு 2

டீமானடைசேஷனை முன்னிட்டு 14 நவம்பர் 2016 அன்று ஃபேஸ்புக்கில் பதிவிட்ட சில கருத்துக்கள். 

------------------------------------------ 

(பி.ஜே.பி, மோடி, ஏழைகள் பாவம் அது இது என முன் முடிவுகளுடன் படிக்க வேண்டாம்) 

------------------------------------------

கேள்வி பதில் - 2 

"500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதாமே"

"அது பயமுறுத்தும் வகையில் வைக்கப்பட் தலைப்பு. சாமானியர்கள் பயப்படும் அளவுக்கு ஒரேடியாக அப்படி ஆகி விடவில்லை. இன்று முதல் 500 ரூபாய்க்கு புதுசு வருதாம். 2000 ரூபாய் ஆல்ரெடி வந்தாச்சாம். ஆக, 1000 மட்டும் தான் செல்லாது"

"இப்படி ஒரே நைட்ல செல்லாது ன்னு சொல்றதுக்கு பதிலா, டிசம்பர் 30 வரை செல்லும் னு அறிவிச்சிருக்கலாமே"

"பதில் 1 - கிட்டத்தட்ட இரண்டும் கலந்த நிலை தான் இப்போது. கடைகளில் தான் செல்லாது. டிசம்பர் 30 வரை பேங்கில் செல்லுமே"

"பதில் 2 - அப்படி சொல்லியிருந்தா இன்னைக்கு 44 இலட்ச ரூபாய் செல்லா நோட்டுகளை வேலூர் கோவிலில் கொண்டு கொட்டிய பெரிய மனிதர் நின்று நிதானமாக பினாமிகளை வைத்து தினம் தினம் வேறு வேறு வங்கிகளில் அந்தப் பணத்தை வௌ்ளையாக்கி இருப்பார். இவர் போல் எத்தனையோ இலட்சம் பேர் செய்திருப்பார்கள்". 

"என் சொந்தக்காரர் கைல பிஸினஸ் பணம் 3 இலட்சம் வச்சிருக்கார். பாவம். அவர்லாம் என்ன செய்வார்?"

"முதல் பதில் - அது உண்மையிலேயே உங்க சொந்தக் காரரா? இல்ல நீங்களேவா?"

"பதில் 2 - பிஸினஸ் பணம் தானே? பயம் ஏன்? மூன்று இலட்சம் இருந்தா, வீட்ல இருக்குற நாலு பேர் அக்கவுண்ட்ல பிரிச்சு பேங்க்ல கட்டுங்க. வொய் பொலம்பிங்?"

"பேங்குல கட்டுனா வருமான வரி பிடிப்பாங்களாமே?"

"பதில் 1 - அப்போ இதுவரை கட்டலை. அப்படித்தானே?"

"பதில் 2 - 3 இலட்ச ரூபாய் பல்க் ஆ வர்ற அளவுக்கு பிஸினஸ் பண்றாருன்னா, வருமான வரி கட்டியிருக்கணுமே. கட்டியிருந்தா பயப்படாமே பேங்க்ல போய் கட்டச் சொல்லுங்க" 

உங்க மைண்ட் வாய்ஸ் - இல்ல, கொஞ்சமா கணக்கு காட்டி வரி கட்றாரு. முழுசா கட்றதில்லை. 

(உதா - மாதம் மூன்று இலட்சம் சம்பாதிப்பவர்கள் எல்லாம், வருடம் வெறும் 5 இலட்சம் என கணக்குக் காட்டுபவர்கள். அதாவது உங்களுக்கு பில் போடாமல் துண்டுச் சீட்டில் எழுதியே பொருள் விற்கும் மளிகைக் கடை அண்ணாச்சி போன்றோர், ஹோல்சேல் கடை சேட்டு, ஸ்வீட் கடைக்காரர்கள், பொருள் கை மாற்றி கமிஷன் வாங்கும் நபர், லேண்ட் புரோக்கர்கள், சீட் வாங்கிக் கொடுத்து கமிஷன் வாங்குவோர், பாட்டி பெயரில் டாடா ஏஸ் வாங்கி வாடகைக்கு விடுபவர்கள், மொத்தமாய் கூலி வேலைக்கு ஆள் அனுப்பி கமிஷன் வாங்குவோர் ப்ளா, ப்ளா, ப்ளா) 

"பதில் - இவ்ளோ நாளா எத்தனை வருஷம் கட்டாம எஞ்சாய் பண்ணியிருப்பீங்க? இப்போ கட்டுங்க"

இந்த இடத்தில் தனியார் பெரு நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களையும், நாம் எப்போதுமே திட்டிக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்களையும் பாராட்டியே ஆக வேண்டும். அவர்கள் தான் ஒழுங்காக வரி கட்டிக் கொண்டு இருப்பவர்கள். வரி பிடித்தம் போகத்தான் சம்பளம் கைக்கே வருகிறது. 

தொடரும்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக