செவ்வாய், 24 நவம்பர், 2020

இது எவரையும் குறிப்பிடும் பதிவு அல்ல. பலரையும்.

25 நவம்பர் 2016 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது (அதன் லிங்க்)

பிரபலங்கள், எழுத்தாளர்கள், பிரபல எழுத்தாளர்கள் பலரும் ஃபேஸ்புக்கில் எழுதுவதை வைத்து சண்டைக்குப் (அட் லீஸ்ட் விவாதத்திற்குக் கூடப்) போக வேண்டாம். 

ஆன்லைன் அடிமைகளாகிப் போன பலரது பதிவுகளைப் பார்த்தால் உண்மையை, நடந்ததை எழுதுகிறார்களா? புனைவு எழுதுகிறார்களா? கதையா? வஞ்சப் புகழ்ச்சியா? ப்ளாக் ஹியூமரா? என்று புரிந்து தொலைய மாட்டேனென்கிறது. யானை படம் வரைந்து கீழே "யானை" என்று போட்டுத் தொலைத்தால் அது "யானை" என்று புரிந்துபோகும். அதையும் செய்ய மாட்டேனென்கிறார்கள். 

பிரபலத்தை மதித்து கமெண்டில் எதிர்வினை புரிபவர்களையும் "கீழாக" மதித்து பதில் கமெண்டுகிறார்கள். "இந்த சமூகத்திற்கு புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை" என்று ஒரு சீண்டல் வேறு. "நான் ஏற்கெனவே என் நிலையை அந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேன், இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேன்" என்று ஒரு ரிப்ளை. அவர்களது பதிவுகளை ஆதி முதல் அந்தம் வரை நோண்டித் தேடிப் படிப்பது தான் நம் வேலையா? 

டிஸ்கி - இது எவரையும் குறிப்பிடும் பதிவு அல்ல. பலரையும். 

அல்லது தங்கள் பாசறைக்குள் இருக்கும் இரண்டு பேருக்குள் பேசி வைத்துக் கொண்டு எதிரணியில் நின்று சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இவ்வுண்மை தெரியாமல் உள்ளே நுழைந்து ஒரு சார்பாகப் பேசும் அப்பாவிகளுக்கு ரத்த விளார் தான். ஜாக்கிரதை.

புது டிஸ்கி - நான் பொதுவாச் சொன்னதை யாரேனும் "என்னைத் தான் சொல்றான்" னு தப்பாகப் புரிந்து கொண்டால் அதற்கு அடியேன் பொறுப்பல்ல.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக