செவ்வாய், 17 நவம்பர், 2020

ஃப்ரீலான்சர் கொடுமைகள்

2017 நவம்பர் 17 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

ஃப்ரீலான்சர் ஆக வேலை செய்வதில் இருக்கும் பெரிய கொடுமை பேமெண்ட் வாங்குவது.

(முஸ்கிளெய்மர் - நியாயமாக பேமெண்ட் வழங்கும் நண்பர்கள் கோபிக்க வேண்டாம். இது அவர்களைப் பற்றி அல்ல. அவர்களுக்கு முன்பே நன்றி. பெரும்பாலானோர் சரியான சமயத்தில், சரியான நேரத்தில், நியாயமாக பேசிய தொகையை வழங்கி விடுகிறார்கள்)
சில கல்வி நிறுவனங்களில் நேரடியாக பேசிச் சென்றால் அன்றைக்கு மாலையே கையில் காசு வந்து விடும். வேறொரு கன்சல்டன்ஸி நிறுவனம் மூலம் சென்றால் அவற்றில் சில வார இறுதியில் வழங்கும், சில மாத இறுதியில், சில 30 நாள் அவகாசத்தில், சிலர் அடுத்த மாதக் கடைசி - அதாவது ஜூலையில் எந்த தேதியில் வேலை செய்திருந்தாலும், ஆகஸ்ட் இறுதியில் பணம் (இதை அவர்கள் ஆரம்பத்திலேயே சொல்வது முக்கியம். 30 நாள் என்று சொல்லி விட்டு, அதை நான் ஒப்புக்கொண்டு போய் வந்தால், 30 நாள் வரைக்கும் நான் காசு கேட்பது தப்பு). டிரெயினிங் ஃபீல்டில் 30 நாள் என்பது ஐடியல்.
பெரும்பாலும் பல நிறுவனங்கள் உணவு மற்றும் டிராவல் கன்வேயன்ஸை உடனடியாகத் தந்து விடுவார்கள். கைக்காசு செலவில்லை. பேமெண்ட் மட்டும் பிறகு, அதுவும் முன்பே சொன்னபடி. சிலர் முன்கூட்டியே "சார் எல்லாம் உங்க செலவு, ப்ராஸஸ் படி கடைசியில் தந்து விடுகிறோம் என்பார்கள். சொன்னபடி நியாயமாகவும் தந்து விடுகிறார்கள். இந்த ஏற்பாட்டில் கல்வி நிறுவனத்திற்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. கன்சல்டன்ஸி தான் பொறுப்பு.
ஆனால், தனியாக நிறுவனம் வைத்திருக்கும் ஒரு நாதாறி, ஒருமுறை இன்றைக்கே டிரெயினிங், அவசரம் என்று அழைத்து வகுப்பெடுக்க வைத்து விட்டு, பேமெண்டுக்கு 4 மாதம் அலைய விட்டான் (அவனுக்கு என்னாங்க மரியாதை?)
அதே போல, ஒரு நிறுவனம். மஹிந்திரா கம்பெனியின் இணை நிறுவனங்களில் ஒன்று. முதலில் பேச்சுவார்த்தையில் 15 நாட்களுக்கொரு முறை பேமெண்ட் என்றார்கள். அக்ரிமெண்ட் (அதுவே ஒன் சைடர் அக்ரிமெண்ட் வேறு) போடும் போது மாதம் ஒரு முறை 10 ம் தேதி என்றார்கள். ஆனால் வகுப்புகள் நடக்கையில், அரசு காசு தந்தால் தான் பேமெண்ட் என்றார்கள். ஏன்யா? உன் அக்ரிமெண்ட் என்ன? இப்போ நீ பேசுவது என்ன? உனக்கு பேமெண்ட் வரலைன்னா, எங்களுக்குத் தரமாட்டியா? அப்ப எதுக்கு அக்ரிமெண்ட் போட்டே?
இப்படியே நான்கைந்து மாதங்கள் அலைய விட்டு, டென்ஷன் ஆக்கி, கடுப்பேற்றி, வம்பிழுத்து, சண்டை போட வைத்து, அதற்கு அவர்கள் கடுப்பாகி, (அவர்கள் அக்ரிமெண்ட் எங்கள் அனைவரிடமும் இருந்ததால்) லீகல் நோட்டீஸ் அனுப்பவா என்று கேட்ட நான்காவது நாள் பேமெண்ட் தந்தார்கள். கிட்டத்தட்ட நாங்கள் 10 பேர் இப்படி.
இப்போது அதே போல் ஒரு நிறுவனம். அந்நிறுவனத்தின் சார்பாக __________________ ஊரில் உள்ள ஒரு "பிரபல" கல்லூரி மாணவர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி வகுப்புகள் எடுத்திருந்தேன். 30 நாள் பேமெண்ட் சைக்கிள் என்றார்கள். அதன்படி அக்டோபர் 7 ம் தேதி கையில் காசு வந்திருக்க வேண்டும். இன்று நவம்பர் 17ம் தேதி. 70 நாள் ஆச்சு. நடுநடுவில் கோ ஆர்டினேட்டரிடம் வாட்ஸ் அப்பினால் இன்று, நாளை, இந்த வாரம், அடுத்த வாரம் என்பான். கன்சல்டன்ஸி யின் தலைவர் அம்பேரிக்காவில் இருக்கிறார். அவருக்கு கால் செய்து மேலும் 30, 40 ரூபாயை இழக்க நான் தயாரில்லை. வாட்ஸ் அப்பை அவரும் கண்டுகொள்வதில்லை.
ரெஃபர் செய்த பெரிய மனிதரிடம் கேட்டால், ஸாரிங்க, எனக்கும் வரலை. நானும் உங்களைப் போலத் தான் என்கிறார். (அப்போ என்ன வெங்காயத்துக்கு நீ பார்ட்னர் மாதிரி என்னை மினி இன்டர்வியூ எடுத்தே?).
இப்போது போன் செய்தால் அந்த கோ ஆர்டினேட்டர் நீங்க யாரு? எப்ப கிளாஸ் எடுத்தீங்க? என்கிறான்.
ஆப் கி பார் ஃப்ராடு சர்க்கார் (இப்ப இதானே ட்ரெண்டு) மோடி ஒழிக.

அப்டேட் - அந்த பேமெண்ட் வந்து சேர சுமார் ஒரு வருடம் ஆச்சு. நானும் விடாமல் பிறாண்டி வாங்கிவிட்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக