செவ்வாய், 24 நவம்பர், 2020

டீமானடைசேஷனை முன்னிட்டு - பதிவு 4

25 நவம்பர் 2016 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

டீமானடைசேஷன் விஷயத்தில் எதிர்ப்பு அல்லது ஆதரவு என்பது அவரவர் நிலைப்பாடு. ஆனால் அதற்காக மொக்கை மொக்கையாய் சம்பவங்களை யோசித்து க்ரியேட் செய்வது அல்லது பின்னணி பற்றி யோசிக்காமல் தன் கண்ணில் படுபவற்றை மட்டும் வைத்தே ஸ்டேட்டஸ் உருவாக்குவது, அதை வைத்து மோடியைத் திட்டுவதெல்லாம் சரியான காமெடி. 

கீழுள்ள ஸ்டேட்டஸைப் (லிங்க்) படியுங்கள். 




அந்த சிறு வியாபாரியின் வருமானம் போச்சாம். இவர்களின் வியாபாரத்தை நசுக்கி விட்டு பெரு நிறுவனங்களை வாழ வைக்கப் போகிறாரா (மோடிதான் வேற யாரு?) என்று முடித்திருக்கிறார். செம காமெடி. 

இது போன்ற "அய்யோ பாவம்" செய்திகளைப் பகிரும் போது இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்கலாம். அந்தப் பெண்மணி விற்கும் "க்வாலிட்டி வால்ஸ்" மட்டும் இந்தியக் கம்பெனியா? அல்லது சிறுதொழில் மூலம் அந்தப் பெண்மணியே உருவாக்கிய ஐஸ்கிரீமா? அவர் முடித்துள்ள கடைசி வரியின் படி இந்தப் பெண்மணியின் வியாபாரம் நன்றாக நடந்தாலும் "க்வாலிட்டி வால்ஸ்" என்ற பெரு நிறுவனம் தான் பலன் பெறப் போகிறது. 

க்வாலிடி வால்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் இன் ஒரு அங்கம் என்பதும், அது நெதர்லாந்து - லண்டன் கூட்டு நிறுவனமான யுனிலீவர் இன் ஒரு அங்கம் என்பதும், க்வாலிடி வால்ஸ் தயாரிப்பது ஐஸ்கிரீமே அல்ல, (அவர்கள் "ஃப்ரோஸன் டெஸர்ட்" என்ற வார்த்தையைத்தான் இன்று உபயோகப் படுத்துகிறார்கள். அப்படி என்றால் கிட்டத்தட்ட டால்டா என்று அர்த்தம்) 

அவர்கள் ஐஸ்கிரீம் என்ற வார்த்தையை உபயோகப் படுத்தக் கூடாது என்றொரு கேஸ் நிலுவையில் இருப்பதும் அவருக்குத்  தெரியுமா? தெரியாதா? என்று கேட்டால் நான் மடைமாற்றுகிறேன், அறிவு ஜீவி என்றெல்லாம் சொல்கிறார். 

இதில் கமெண்டுகளில் என்னை அறிவுஜீவி என்று வஞ்சப் புகழ்ச்சி செய்கிறார். அவரது கருத்தை நான் மறுக்கலாம். என் கருத்தை அவர் மறுக்கலாம். ஆனால் "ஜீவித்தனமான அறிவாளிகளுக்கு" என்று சொல்வது என்னை நேரடியாகத் தாக்குவதாகும். (அதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வேறு). 

அந்தப் பெண்மணியின் வியாபாரம் பெருகினாலும் க்வாலிடி வால் என்கிற பெரு நிறுவனம் தான் பயன் பெறப் போகிறது. ஸோ, பிரதமரையும், அவரது திட்டத்தையும் திட்ட எதையாவது சம்பவங்களைக் கஷ்டப்பட்டு தேடித்தேடி ஸ்டேட்டஸ் போடுவது போல இருக்கிறது இது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக