வெள்ளி, 20 நவம்பர், 2020

அவார்டு வாங்கலையோ அவார்டு

21 நவம்பர் 2018 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

(பாஸிடிவாகச் சொன்னால்) சில இயக்கங்களில் (ஒரு நல்ல காரியத்துக்காக) ஒரு டொனேஷன் தொகை கொடுத்தால் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட பட்டம் வழங்கப்படும். வேறு விதமாக ஃபேஸ்புக் பாஷையில் சொன்னால் இப்ப காசு கட்டினா அடுத்த ஃபங்க்ஷன்ல பட்டம் வழங்கப்படும். இது கஷ்டப்பட்டு படித்து வாங்குவதோ, அல்லது ஏதேனும் சாதனை செய்து வாங்குவதோ அல்ல. காசு கட்டினா பட்டம் கிடைக்கும்.

ஆனா (பின்னணியில) காசக்கட்டிட்டு ஒரு பட்டத்தை வாங்கிப்போட்டுக்கறதுக்கு இவனுங்க பண்ற அளப்பறை இருக்கே யப்பா... இந்த ஃபோட்டோஷாப்பையும், வச்சிகிட்டு... அவரு என்னமோ கவுந்து போன கப்பலை நட்டமா தூக்கி நிறுத்திட்ட மாதிரியும், கீழ விழுந்த ஏரோப்ளேனை சூப்பர்மேன் மாதிரி பறந்து அலாக்கா தூக்கி நிறுத்தி அதை காப்பாத்தின மாதிரியும், அதை அந்த இயக்கமேமே.........தானா பாத்து, பாராட்டி, அங்கீகரிச்சு இவருக்கு பட்டம் வழங்குனா மாதிரியும் தம்பட்டம் அடிச்சுக்குவானுங்க பாரு.......... சாமி. முடியல. டேய், என்கிட்ட காசு இருந்தா நானும் ஏழு பட்டம் வாங்கிப்போட்டுக்குவேன்டா... பக்கிகளா..
இதுக்கெல்லாம்
Maram R
மாதிரி ஆளுங்கதான் சரி. கழுவி ஊத்தறதுக்கு. இந்த ஸ்டேட்டஸூம் அந்த ஸ்டைல் தான்.
யாருக்கு? யாருக்கோ. இது பல இயக்கங்களுக்குப் பொருந்தலாம். நீங்களா யாரையாவது கற்பனை பண்ணிகிட்டா கம்பேனி பொறுப்பில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக