ஞாயிறு, 15 நவம்பர், 2020

டாக்டர் ஸ்டிரேஞ்ச்.


16 நவம்பர் 2016 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

மார்வல் லின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் பற்றி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதே இல்லை. இணையம் முழுவதும் அவை பற்றிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. கருந்தேள் போன்றோர் அவற்றை விலாவாரியாக அலசிக் காயப்போட்டிருக்கிறார்கள் தமிழிலேயே. இவற்றில் பல படங்கள் ஒரு சூப்பர் ஹீரோ வின் பூர்வ கதை என்கிற கான்செப்டிலேயே இருப்பது ஒரு விதத்தில் அவர்களது வெற்றிக்குக் காரணம். 

டாக்டர் ஸ்டிரேஞ்ச் - ஒரு பிரபல, வழக்கம் போல், பிரில்லியண்ட் ஆன நியூரோ சர்ஷன் டாக்டர் ஸ்டீபன் ஸ்டிரேஞ்ச் - க்கு நேரும் ஒரு விபத்து. அதன் காரணத்தினால் ஒரு ஆபரேஷன் எனத்துவங்கும் இந்தக் கதை இந்த சூப்பர் ஹீரோ எப்படி உருவாகிறான், அவனது முதல் வில்லன், ஒரு சண்டை, இப்போதைக்கு சுபம், அடுத்த வில்லனின் அறிமுகம் என்ற மார்வலின் டெம்ப்ளேட் இல்ல அமைக்கப் பட்டிருக்கிறது. 

"கேப்டன் அமெரிக்கா - சிவில் வார்" படத்தை தியேட்டரில் பார்த்தபோது நம்மைப்போன்ற நண்பர்களின் தூண்டுதலால் தியேட்டருக்கு வந்திருந்த பல பேர், "இது யார்றா? அது யார்றா? அவன் எப்டி டா பறக்கறான்? இவன் எப்டி பெருசானான்?" என கத்திக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒரே சூப்பர் ஹீரோ ஸ்பைடர் மேன் மட்டுமே. அப்படிப்பட்ட பொது ரசிகர்களுக்கு ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் இந்தப் படம் பார்க்க நீங்கள் முந்தைய மார்வல் படம் எதையும் பார்த்திருக்கத் தேவையில்லை. கம்ப்ளீட் பேஸிக் கில் இருந்து ஆரம்பிக்கிறது படம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக