12 நவம்பர் 2018 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.
ஏழே நாளில் நீங்கள் ரெண்டு கிலோ எடை குறையலாம் என்றோ, பதினைந்தே நாட்களில் நாலரை கிலோ எடை குறையலாம் என்றோ போன மாதம் யாரேனும் சொல்லியிருந்தால் கூட நம்பியிருக்க மாட்டேன். அப்படி வரும் விளம்பர ஃபோட்டோக்களைக்கூட "அடப்போங்கடா என் ஃபோட்டோஷாப்பு" என்று ஊதித்தள்ளி விட்டு போகிறவன் நான்.
ஆனால், போக வர விமானப் பயணநாட்கள் உட்பட வெறும் ஏழே நாட்களில் நான் இழந்த எடை ரெண்டு கிலோ. உடல் ஒட்டாத உணவுகள், பின்பக்கம் சிவப்புக் கொடி காட்டினாலும் நிற்காத வெளியேற்றம், ஓய்வு குறைந்த நாட்கள், இடைவிடாத முன் பின் பயணங்கள் என நொய்டா என்னைக் கடைந்து விட்டது.
என் வாழ்வில் முதன் முறை எடை குறைப்பு என்ற விஷயம் நடந்திருக்கிறது. நானெல்லாம் ரொம்ப காலமா 50 கிலோ தாண்டாத அண்டர் வெயிட்டு கேஸ் பாஸ். அதனாலேயே இரண்டு முறை இரத்த தானம் கொடுக்கப் போய் வாசலோட திரும்பி வந்திருக்கிறேன். ஏதோ கல்யாணம் லாம் செஞ்சு, கண்டபடி வெளியே அசைவம் தின்னுமேய்ஞ்சு ஏதோ என் ஹைட்டுக்கு ஏற்ற மேட்ச்சா 65 - 66 கிலோ வைத்திருந்தேன். நொய்டா வால 2 கிலோ போச்சு.
மீண்டும் வினாசகாலே வந்தது தீபாவளி ரூபத்தில். அதாவது பட்டாசு ரூபத்தில். எங்க நாலு வாண்டுகளையும் குஷிப்படுத்துகிறேன் என்ற பேரில் தினமும் கொஞ்சம் என மூன்று நாளாக வரிசையாக மத்தாப்பு வெடித்துக் காட்டிக் கொண்டிருந்தேன். தீபாவளியன்று மச்சான், "உங்களை நம்பி இன்னோரு 1500 ஓவாவுக்கு வாங்கி வைத்திருக்கேன், வந்து வெடிச்சுட்டுப் போங்க" என்று பாசமாக அழைத்ததில் வந்தது வினை இருமல் ரூபத்தில்..
தீபாவளிப் பட்டாசுப் புகையும், குளிர் கிளைமேட்டும் சேராமல் தொடர் இருமல், சளி, நெஞ்செரிச்சல், என உடம்புக்குள் டிரெயின் ஓட ஆரம்பித்து ஜூரம், குளிர் ஜூரம், கடும் உடல்வலி, முதுகு வலி, மீண்டும் வெளியேற்றம், கபம், தலைவலி என ஒவ்வொரு ஸ்டாப்பிங்காக நின்று நின்று 4 நாட்கள் தொடர்ந்து ஓடியது.
விளைவு. இன்றைய எடை 61.5 மட்டுமே. என்னை வாழ்த்துங்க ப்ரண்ட்ச்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக