சுமார் மூன்று வருடங்கள் முன்பு ஆனந்த விகடன் (சுஜாதா சொன்ன எட்கூ போல) "ஹிஹிக்கூ" என்ற பெயரில் ஒரு போட்டியை நடத்தியது. தேர்வு செய்யப்பட்ட சுமார் பத்துப்பத்து "ஹிஹிக்கூ"க்களை வாராவாரம் வெளியிட்டது விகடன். பல வாரங்கள் தொடர்ந்து வெளியான "ஹிஹிக்கூ"க்களில் அடியேனுடையதும் ஒன்று.
(அப்போதைய) ஹாட் நியூஸ்களை வைத்து "ஹிஹிக்கூ" எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி. ஆகையால் இதைப்படிக்கும் போது மூன்று வருஷம் பின்னோக்கிப்போக ஜம்போ கொசுவத்தி சுத்திக்கொள்ளுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விகடனில் வெளியான என்னுடைய "ஹிஹிக்கூ" இது
இரயில்வேயை நம்பர் ஒன்
ஆக்கிட்டாரு லாலு!
இதே போல ஹைவேயை
ஆக்குவாரா நம்ம பாலு!
மற்றவையெல்லாம் போட்டிக்காக எழுதி அனுப்பப்பட்டவை. (எத்தனை எழுதி அனுப்பினா ஒண்ணே ஒண்ணு பப்ளிஷ் ஆகுது பாருங்க).
-----------------------------------------
எடுப்பாவே இல்லையாம்
புது ஜேம்ஸ் பாண்டு
எப்படியோ போகட்டும்
உனக்கு ஏன் காண்டு?
-----------------------------------------
சர்ச்சைக்கு நடுவுல
வளருதுங்க "பெரியார்"
சர்ச்சையை வளர்க்குதுங்க
முல்லைப்பெரியார்
-----------------------------------------
விகடன்ல போடறாங்க
வாராவாரம் ஹிஹிக்கூ
சுஜாதா சொன்னது போல
இதுதானா எட்கூ?
-----------------------------------------
கோவலன் ஸ்லிப் ஆனது
சிலப்பதிகாரம்
நம்ம விஷாலு ஸ்லிப் ஆனது
சிவப்பதிகாரம்
-----------------------------------------
டெல்லியில் போடுறாங்க
கடைகளுக்குப் பூட்டு!
கோர்ட்டுக்குக் கேட்குதா
அவங்க வயித்துப் பாட்டு!
-----------------------------------------
இசையால நிறையுதுங்க
விகடன் புக்ஸூ....
போட ஆரம்பிச்சுட்டாங்க
சீஸன் சிப்ஸூ
-----------------------------------------
ஊரெல்லாம் கச்சேரி
டிசம்பர் மாசம்....
விகடன்லாம் வீசுது
மியூஸிக் வாசம்...
-----------------------------------------
அஞ்சு வருஷத்துக்கு ஒருமுறை
மாறுதுங்க ஆட்சி!
கேஸூலேர்ந்து தப்பிக்க
தாவுறாங்க பல கட்சி!
-----------------------------------------
ஆளில்லாத கேட்டு!
பாத்து வண்டியை ஓட்டு!
பாக்காம போனதுனால
பதினேழு பேரு அவுட்டு!
-----------------------------------------
தோனி தம்பிக்கு பிடிச்சது
படுகோன் பொண்ணு தீபிகா...
தோடா இங்கயும் பாரு...
ஸ்குவாஷ் ஏஞ்சல் தீபிகா...
-----------------------------------------
பள்ளிக்கூட கிணத்துல
+2 பொண்ணு பிணம்.
கொலைகாரப்பாவிக்கு
கல்லாய்ப்போச்சா மனம்?
-----------------------------------------
வரலாறு வெற்றியால
அஜீத்துக்கு ரிப்பீட்டு!
மத்தவங்க ஆகுறாங்க
அவரப்பாத்து அப்பீட்டு!
-----------------------------------------
பொங்கலுக்கு அடிப்பாங்க
சுவத்துக்கு சாந்து!
பொளந்து கட்றாருங்க
புது விஜயகாந்து!
-----------------------------------------
டென்னிஸூ ரேட்டிங்குல
சறுக்குதுங்க சான்யா!
ஸ்குவாஷ் போட்டி ரேட்டிங்ுகல
சாதிக்குமா சாய்னா!
-----------------------------------------
மெட்ராஸ்-ஐ பரவுதுன்னு
சொல்றாங்கப்பா நியூஸூ!
கலைஞர் போலக் கண்ணாடி
பண்ணுங்கப்பா யூஸூ!
-----------------------------------------
படிச்சாச்சா.........?
அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?
தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?
புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...
புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
நீங்க (ஓட்டு) போட்டா மட்டும் போதும்.... போட்டா மட்டும் போதும்....
எலைக்கு ஏழ்நூறு ரூவா செலவு பண்ணிருக்கோம்ல....
-----------------------------------------
பிடிச்சிருக்குங்க......ரசித்து ஓட்டு போட்டுட்டேன்....!
பதிலளிநீக்குநன்றிங்கோவ்............
பதிலளிநீக்குநல்லாருக்கு.. டி.ராஜேந்தர் கூட டிஸ்கஸ் பண்ணீங்களா எழுதறதுக்கு முன்னாடி?
பதிலளிநீக்குஆமாங்க. நீங்க யாரு..... வைரமுத்து ஃபிரண்டுங்களா?
பதிலளிநீக்குஎஸ்கா ஹிஹி்க்கூ எல்லாம் டாப்பு..!
பதிலளிநீக்குஇதுக்கு வுட்றாத கேப்பு..!!
ஹி.ஹி..ஹி...கொஞ்சம் ட்ரை பண்ணா நமக்கும் ஹிஹி்க்கூ வரும்போலயே..!!
கலக்கல் எஸ்கா
பதிலளிநீக்குஎல்லாமே நல்லாயிருக்கு எஸ்கா:)! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குTO ராமலக்ஷ்மி
பதிலளிநீக்குமிக்க நன்றி....
ரொம்ப சூப்பரா இருக்குங்க!
பதிலளிநீக்குஎஸ்.கேவுக்கு நன்றி சொல்கிறார் இந்த எஸ்கா..
பதிலளிநீக்குAll Hi Hi koos are good. But Top one is best that's why they print that Hi Hi Koo.
பதிலளிநீக்குKarthikeyan.V
Yes. you are right. Thank you karthikeyan.V
பதிலளிநீக்கு