வந்த பிறகு ஒன்றும் பெரிய வெட்டி முறிக்கிற வேலை இல்லை. ஆனால் பயங்கர ரிலாக்ஸாக இருக்கிறது. மூவி டவுன்லோட், ஸாங் டவுன்லோட் என்று எதையும் செய்ய முடியாத படியான (ஆபீஸில் இருந்து கொடுக்கப்பட்ட) கனெக்ஷன் இது். ஆனால் டேட்டா கார்ட் இல்லாமல் ஆபீஸ் வேலை பார்ப்பதென்பது தான் ரொம்பவும் கொடுமை.
டேட்டா கார்ட் இல்லாத போது ஒவ்வொரு முறை ஈ.மெயில் அனுப்புவதற்காகவும் பிரவுஸிங் சென்டரில் போய் கியூவில் நின்று கொண்டு, அதுவும் லேப்டாப்பில் (தான் எம்.எஸ்.அவுட்லுக் போட்டு வைத்திருக்கிறேன். அதனால் லேப்டாப்பில்) கனெக்ட் செய்து கொடுங்கள் என்றால் சம்பந்தப்பட்ட சிஸ்டத்தில் அமர்ந்திருப்பவர் எழும் வரை உட்கார்ந்திருக்க வேண்டும். உட்கார்ந்திருக்கும் போது எதாவது ஃபைலை நோண்டலாம் என்றால் பேட்டரி சார்ஜ் தீர்ந்து விடும். சார்ஜ் போடலாம் என்றால் சார்ஜரை மறந்து விட்டு வந்திருப்போம். சார்ஜரை கொண்டு வந்திருந்தால் சார்ஜ் போடும் சாக்கெட் நமக்குத் தேவையான சிஸ்டத்தை விட்டு மிக தூரத்தில் இருக்கும். இருக்கும் சார்ஜை வைத்துக்கொண்டு பென்டிங் மெயில்களை அனுப்பி விட்டு புதிய மெயில்களை டவுன்லோட் செய்து கொண்டு செல்ல வேண்டும்.
வீட்டிலிருந்து பத்து நிமிட நடை தானே என்று ஈஸியாகச் சொல்லி விடலாம். ஆனால் பத்து நிமிடம் என்றால் ஷார்ப்பாக பத்து நிமிடமா ஆகும்? இல்லை. ஒவ்வொரு முறையும் கேஸை ஆஃப் செய்து விட்டு, எல்லா லைட்டயும் ஆஃப் செய்து விட்டு, ஹீட்டரை ஆஃப் செய்து விட்டு, வீட்டைப்பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு என்று இருபது நிமிஷ வேலை வைக்கும். போக இருபது, வர இருபது. கணக்குப்போட்டுக் கொள்ளுங்கள்.
இதில் மழை வந்தால் போச்சு. மழையிலேயே நனைந்து கொண்டே வீட்டிலிருந்து நடந்து வந்து மெயில் அனுப்பி விட்டு திரும்பி வீட்டுக்குப்போக வேண்டும். நாம் நனையாவிட்டாலும் லேப்டாப் நனையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பிரவுசிங் சென்டர் 9.15க்கு க்ளோஸ். ஆக எட்டேமுக்காலுக்குள் போய் நிற்கவேண்டும். இல்லாவிட்டால் ஜென்டிலாக ஸாரி சொல்லி விட்டு ஷட்டரை இறக்கி விடுவார்கள். அப்புறம் பத்து மணிக்கு மேல் போய் சாப்பாட்டுக்கச்சேரியை ஆரம்பிக்க வேண்டும். ஓசூரில் மகா பிரச்சினை ஒன்று உண்டு அது குளிர். நடுக்கி எடுக்கும் குளிர். அதற்கு பயந்து கொண்டே ஆளாளுக்கு ஒன்பது மணிக்கே கடையை சாத்தி விட்டு போய் விடுகிறார்கள். பிறகு சிங்கி தான். அதாங்க சோத்துக்கு. மேகி, கெலாக்ஸ், ரெடி டு ஈட் வகையாக்களை கண்டு பிடித்த புண்ணியவான்களை கோயில் கட்டி கும்பிட வேண்டும் போலத்தோன்றும்.
எப்படியோ போங்கள். வந்து விட்டது அல்லவா? மற்ற வேலைகளை பார்க்கத் துவங்கலாம். சப் கலெக்டருக்கு டெமோ எடுத்தது, நீயா நானாவில் கலந்து கொண்டது, பாண்டிச்சேரி போய் பேக் வாட்டர்ஸ் போய் வந்தது, மைனா படம் பார்த்தது என இன்னும் எழுத வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.
ஆரம்பிக்கலாமா? ரெடி ஜூட்.
-----------------------------------------------------
சாருவின் தேகம்

சாருவின் தேகம் நாவல் நன்றாக இருக்கிறதாமே. ப்ளாக் வட்டாரம் முழுக்க ஒரே டாக் தான். பகீரென்று இருக்கிறது. திகீரென்று இருக்கிறது என்று. சாருவின் முந்தைய கதாபாத்திரங்களான சூர்யா, பெருமாள் வரிசையில் சேர்வானா தர்மா? பார்க்கலாம். சரோஜாதேவி நாவல் என வேறு மிஷ்கின் கிளப்பி விட்டுவிட்டுப் போய் விட்டார். சாருவின் ப்ளாக்கில் போட்டுக் கிழி கிழி என்று கிழிக்கிறார் மிஷ்கினை. அவருடைய அடிப்பொடிகள் எல்லோரும் தத்தமது ப்ளாக்கில் சப்போர்ட்டாக எழுதிக்குவிக்க ஐநூறு புத்தகங்களைத் தாண்டி விற்றுக்கொண்டிருக்கிறதாம் அது. என்ன ஒன்று? விலைதான் தொண்ணூறு ரூபாய். ஏழு ரூபாய்க்கு மாத நாவலும் அதையும் செகண்ட் ஹாண்டாக மூன்று ரூபாய்க்கு வாங்கிப்படிக்கும் என்னை மாதிரி கஞ்சப்பிசுனாறிகளுக்கு கொஞ்சம் கஷ்டம் தான். பார்க்கலாம். யாராவது வாங்காமலா போய்விடப்போகிறார்கள்? ஓசி வாங்கிப் படித்துக்கொள்வோம். ஒரு வேளை மிஷ்கின் மேலான தூற்றலே தேகம் நாவலுக்கான பப்ளிசிடியோ என்று தான் எனக்குத் தோன்றுகிறது.
------------------------------------------------------
படிச்சாச்சா.........?
அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?
தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?
புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...
------------------------------------------------------
அருமையாயிருந்தது...
பதிலளிநீக்குஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.
புத்தக சந்தை வர இருக்கிறதே... பார்ப்போம்...
பதிலளிநீக்குyeskha அருமை..
பதிலளிநீக்குneenga sonna madhiri vote potachu... aduthu enna?
பதிலளிநீக்கு//ம.தி.சுதா சொன்னது…
பதிலளிநீக்குஅருமையாயிருந்தது... .// வருகைக்கு நன்றி
//philosophy prabhakaran சொன்னது…
பதிலளிநீக்குபுத்தக சந்தை வர இருக்கிறதே... பார்ப்போம்...//
கண்டிப்பாக. ஆனால் தேகத்தை விட வேறு எவ்வளவோ புத்தகங்கள் வருகின்றனவே.
பை தி வே பிரபாகரன், எஸ்.ராவை சந்தித்து விட்டு வந்தேன்.
//Geetha6 சொன்னது…
பதிலளிநீக்குyeskha அருமை..//
வருகைக்கு நன்றி
//மதுரை பாண்டி சொன்னது…
பதிலளிநீக்குneenga sonna madhiri vote potachu... aduthu enna?//
சைட்ல பிரியாணி பொட்டலம் கொடுத்தாங்களே வாங்கிட்டீங்களா? (குவாட்டர் சாப்பிடுற ஆளா இருந்தா பின்னாடி தர்றாங்க, போய் வாங்கிக்குங்க)