குறு கதைப் போட்டிக்கான கடைசி தேதி ஜூலை 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு கதை ஆர்வலர்களே, எழுத்தாளர்களே.. உங்கள் பெயர் உலகமெங்கும் உள்ள தமிழர்களிடம் பிரபலமாக ஒரு மாபெரும் வாய்ப்பு.
சிறு, குறு கதை ஆர்வலர்களே, எழுத்தாளர்களே.. உங்கள் பெயர் உலகமெங்கும் உள்ள தமிழர்களிடம் பிரபலமாக ஒரு மாபெரும் வாய்ப்பு.
“விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ்”-ன் 5
-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு
”செல்வமுரளி” மற்றும் ஜோக் எழுத்தாளர் “சேலம் எஸ்கா” இணைந்து நடத்தும் மாபெரும் குறு
- கதைப் போட்டி.
தேர்வாகும் சிறந்த 50 கதைகள் ஆன்டிராய்டு,
விண்டோஸ் உள்ளிட்ட மொபைல் போன் இயங்கு தளங்களில் அப்ளிகேஷனாக உருவாக்கி வெளியிடப்படும்.
உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கைகளில் உங்கள் கதைகளுடன் உங்கள் பெயர் ஒளிரும்.
கதைகளை
அனுப்பவும், மேற்கொண்டு விபரங்கள் தேவைப் படினும் - ஈ.மெயில் ஐ.டி-க்கள் murali@visualmediatech.com & yeskha@gmail.com
முதல் மூன்று கதைகள் பிரபல நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும்.
பரிசு மற்றும் நடுவர்கள் விபரம் பிறகு....
நண்பர்கள் இந்த அறிவிப்பை ஷேர் செய்து தங்கள்
நட்பு வட்டத்தில் உள்ள போட்டியாளர்கள் மற்றும் ஸ்பான்சர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லும்
படி கேட்டுக் கொள்கிறோம்.
விதிமுறைகள்
உங்கள் கதையின் அளவு அதிக பட்சமே 50 வார்த்தைகள் மட்டுமே. மிகுதல் கூடாது.
ஒருவரது ஒரு கதை மட்டுமே போட்டிக்கு பரிசீலிக்கப்படும். ஆனால் ஒருவரே எத்தனை கதை வேண்டுமானாலும் டைப்பி அனுப்பலாம். நீங்கள் எழுதியதில் "ஏ, சூப்பருப்பா" என்று தோன்றும் கதையை (போட்டிக்கு) என்றும் மற்ற கதைகளை (தொகுப்புக்கு) என்று குறியிட்டும் அனுப்பவும்
வயது வரம்பா? கிடையவே கிடையாது.
உலகின் எந்த மூலையில் இருக்கும் தமிழரும் (தமிழ் எழுதத் தெரிந்த யாரும்) கலந்து கொள்ளலாம்.
கதைகள் இணைய தளத்திலோ, வேறு பத்திரிகையிலோ ஏற்கனவே வெளிவந்திருக்கக் கூடாது, மிக முக்கியமாக மண்டபத்தில் யாரோ எழுதியதை (ஃபேஸ்புக் (அ) ப்ளாக்) "கட்டு, காப்பி, பேஸ்ட்டு, அனுப்பு" செய்யவே கூடாது.
போட்டி முடிவுகள் வெளிவரும் வரையில் மற்ற பத்திரிகைகளுக்கு அனுப்ப மாட்டேன் மேலும் இது சொந்தச் சரக்கே என்று டிஸ்கியில் உத்தரவாதம் போட்டு அனுப்ப வேண்டும்.
கதைகளை நடுவர் குழு தேர்ந்தெடுக்கும். நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
கதைகள் தேர்வு செய்யப்பட்டால் அதன் உரிமை "விஷூவல்மீடியா டெக்னாலஜிஸ்" ஐ சேரும். கதைகளை எந்தப் பதிப்பிலும் வெளியிட விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ்-க்கு உரிமை உண்டு.
தேர்ந்தெடுக்கப்படும் 50 கதைகளும் தொகுக்கப் பட்டு ஆன்டிராய்டு, விண்டோஸ் உள்ளிட்ட மொபைல் போன் இயங்கு தளங்களில் அப்ளிகேஷனாக வெளியிடப்படும். நீங்கள் போட்டியில் கலந்து கொள்வதன் மூலமே அதன் உரிமையை விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ்-க்கு அளிக்கிறீர்கள்.
திகில், த்ரில், நகைச்சுவை, ஐடியா, காதல், நக்கல், அரசியல் என எந்தப் பிரிவிலும் கலக்கலாம்.
"அட" என ஆச்சரியப்படுத்தும் "ஆ" என அதிர்ச்சியூட்டும், "க்யூட்" என புன்னகை பூக்க வைக்கும் "பளிச்" என கவனம் ஈர்க்கும் கதைகளை இருபது கரம் நீட்டி வரவேற்கிறோம். "காதல் வலையில் வீழ்த்து", "சதி வலை", "டைப்பிஸ்ட் கமலா", "ஹெட்கிளார்க் ரங்கநாதன்" போன்ற பழைய சொற்பிரயோகங்களை தயவு செய்து தவிர்க்கவும். "முடியல"
முடிவு வெளியாகும் வரை இது தொடர்பாக எந்த ஒரு தனிப்பட்ட மெயில், போன் விசாரிப்புகளைத் தவிர்க்கவும்.
இது விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ் சார்பாக செல்வமுரளி மற்றும் ஜோக் எழுத்தாளர் சேலம் எஸ்கா இணைந்து தனிப்பட்ட ஆர்வத்தினால் எந்த ஒரு இலாப நோக்கமும் இன்றி நடத்தும் ஒரு போட்டியாகும். எங்களது முடிவே இறுதி முடிவு.
தீபம் விளக்கெண்ணெய் போட்டு பரிசீலித்தும் தவறுதலாக திருடப்பட்ட கதைகள் வெளிவந்தால் அதற்கு கதையை அனுப்பியவரே பொறுப்பு. மேற்கொண்டு எழும் பஞ்சாயத்துகளுக்கு எந்த விதத்திலும் விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ்- ஓ சேலம் எஸ்கா-வோ பொறுப்பல்ல.
ஏதோ, ஆசைக்காக கைக்காசைப் போட்டு நடத்துறோம்பா... எதுவும் நலுங்கு வச்சிடாதீங்க.. ஆலமரத்தடிக்கு போகாம நல்லபடியா முடிச்சுக் கொடுங்க.
இணைய விரும்பும் ஸ்பான்சர்கள் தனியாக தொடர்பு கொள்ளவும் (பெரிய லெவல்-லாம் இல்லைங்கண்ணே. உங்களிடம் நிறைய புத்தக கலெக்ஷன் இருந்தால் பத்து பேருக்கு புத்தகப் பரிசு கொடுக்கலாம். நீங்கள் துணிக்கடை வைத்திருந்தால் சால்வை கொடுக்கலாம், இந்த மாதிரி வேறேதேனும் ஐடியாவும் கொடுங்க)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக