திங்கள், 28 ஜூன், 2021

குட்டி ஆர்ட் ஒர்க்

28 ஜூன் 2020 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது. 

தங்கச்சி பசங்க ரெண்டும் வந்திருந்ததுங்க. நம்முது ரெண்டுன்னு - நாலு பேரா சேர்ந்ததால டி.வி, கலரிங், ஒளிஞ்சு விளையாட்டு, சைக்கிள், குட்டிக்கார், தீனி, சினிமா (அலா வைகுந்தபுரம்லோ, மினியன்ஸ், ஓ மை கடவுளே), சண்டை, போராட்டம் னு ஓடிக்கிட்டிருந்தாங்க.

நமக்குத்தான் "வொர்க் ஃப்ரம் ஹோம்" ல சனி, ஞாயிறு ஏது? நேத்து ரெண்டு பேரண்ட்ஸ் மீட்டிங், இன்னிக்கு ரெண்டுன்னு நாலு, நாலு மணி நேரம் அவுட்டு. தலைவலி போனஸ். மாத்திரை போட்டதுல எக்ஸ்ட்ரா ரெண்டு மணி நேரம் தூங்கி அந்த நேரமும் காலி.
தங்கச்சி பொண்ணுக்கு படம் வரையறதுன்னா ரொம்ப இஷ்டம். சின்னச்சின்னதா நிறைய வரைவா. பார்த்து வரையறது மட்டுமில்லாம கற்பனை பண்ணி வேற நிறைய வரையுறா. நம்ம சின்ன வயசு ஆசையையெல்லாம் அவ மூலமா தீர்த்துக்க வேண்டியதுதான்னு முடிவு பண்ணி அவளுக்கு அப்பப்போ நமக்குத் தெரிஞ்சதை சொல்லிக் கொடுத்துட்டிருக்கேன். கொஞ்சம் பெரிசானா அடுத்த லெவல் ஓவியங்களை அறிமுகப்படுத்தணும். நமக்கும் தூண்டி விட துணைக்கு ஆளாச்சு.
இன்னிக்கு அவளுக்காக Puppet ஸ்டைல்ல ஒரு குட்டி Craft work செய்யலாம்னு எடுத்து இதை செஞ்சேன். பூ சாய்ஸ் அவளுது. வொர்க் நம்மள்து. முந்தா நேத்து அம்மணி ஏதோ வெஜ் பனீர் டிக்கா முயற்சி பண்ணனும்னு நீளமான (டூத் பிக்) ஸ்டிக் வாங்கி வரச் சொன்னாங்க. அதுல ஒன்னை எடுத்தாந்து, அது மேல வெள்ளைப் பேப்பரை ஃபெவிகால் ஒட்டி மடிச்சு, லேசா காய்ஞ்ததும், அவுட்லைன் வரைஞ்சு கட் பண்ணி, மேல கலர் அடிச்சது.
இதே மாதிரி ஸ்டைல்ல குட்டிக்குட்டியா ஆர்ட் ஒர்க் நிறைய பண்ணலாம். நேரம் - 5 நிமிடங்கள் மட்டுமே.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக