வீட்டுக்குள் நுழைந்து சாவியைச் சுண்டும் போதே ப்ளாக்பெர்ரி வீறிட்டது. ஜி.எம்.. நம்பர். எடுத்தேன். ஆனால் மறுமுனையில் பாஸ்...
"ஹலோ! சொல்லுங்க ஸார், யெஸ் ஸார்"
"......."
"நோ ப்ராப்ளம் ஸார், கைல நெட் கனெக்ட் இருக்கு. ஒன் அவர் டைம் குடுங்க. ப்ரசன்டேஷனை முடிச்சு லெவன் பிப்டீனுக்குள்ள மெயில் பண்ணிடறேன்."
பேசி முடித்து போனை அமர்த்தும்போதே அயர்ச்சியாக இருந்தது. அசந்திருந்த உடல், என்னைக்கொஞ்சம் இளைப்பாற விடேன் என்றது. மினுவைப்பார்த்தேன், கொஞ்சமாவது அவளுக்கு ஹெல்ப் செய்யலாம். அவளும் பாவம்தானே.
அயர்ன் செய்தபடியே திரும்பி எனைப்பார்த்த மினுவின் பார்வையில் இருந்தது அனுதாபமா, ஆத்திரமா, ஆதூரமா என அவதானிக்க முடியவில்லை.
"என்னாச்சு?" என்றாள் ஒற்றை வார்த்தையில்.
"போர்டு மீட்டிங்மா"
"அதுக்கு?"
"ஒரு ப்ரசன்டேஷன், எல்லா டேட்டாவையும் கலெக்ட் பண்றதுக்கு லேட்டாயிடுச்சு, அதான்... நாளைக்கும் கொஞ்சம் சீக்கிரம் போகணும்"
போர்டு மீட்டிங்குக்கும் டிரெய்னிங் டிபார்ட்மெண்டுக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்குப் புரியவே இல்லை. நல்ல வேளை நாளைய மீட்டிங்குக்கு சீக்கிரம் போய்த்தொலைய வேண்டுமென்பதால் சீக்கிரம் விட்டு விட்டான்கள். அதனால் பத்து மணிக்கே வீட்டுக்கு வந்தாயிற்று.
"எனக்கும் காலைல சீக்கிரம் போகணும். பேங்களூர். காலைல 6.15க்கு ஃப்ளைட்"
"எத்தனை மணிக்குக் கிளம்பணும்? கார் வேணுமா?"
"வேணாம், நீங்க வர லேட்டானதுனால கேப் சொல்லிட்டேன், அஞ்சேகாலுக்கு வந்துடும். திங்க்ஸ் எல்லாம் கூட பேக் பண்ணிட்டேன்."
எங்கள் பேச்சினால் கவனம் கலைந்து என்னைப்பார்த்து ரிமோட்டோடு கையாட்டினாள் அபி. என் செல்லம்.
"டாடி, நைட்டு லெவன் தர்ட்டிக்கு சோனி பிக்ஸ்ல "கில் பில்" போடறான், நான் முழிச்சிருந்து பாக்கப் போறேன், வில் யூ ஜாயின் மீ?"
மையமாகத் தலையாட்டி வைத்தேன்.
சரளமான ஆங்கிலப் பிரயோகமும், படிப்புச் சூழ்நிலை தந்த தைரியமும், நவீன ஜங்க்-ஃபுட் உணவுக் கலோரிகள் தந்த வாளிப்பும் எட்டு வயதை பதிமூன்றாகக் காட்டியது.
லேப்டாப்பைப் பார்த்ததும் "பேரண்ட்ஸ் மீட்டிங் வராததுக்கு ஸாரி சொல்லி மறக்காம மிஸ்ஸூக்கு ஒரு மெயில் போட்டிடு டாடி" என்றாள்.
டெக்னாலஜியுடன் வளரும் அப்டேட்டட் தலைமுறை. எல்லாம் தெரிகின்றது இவர்களுக்கு. தீனி போடத்தான் நம்மால் முடியுமா?
மினு "ரவி பத்திரிகை வைக்க வந்திருந்தார். ஆகஸ்ட் 24ம் தேதி அவருக்குக் கல்யாணமாம். அவரு கிளம்பும் போதுதான் நான் வந்தேன். அவருக்கு நம்ம அபியைப்பார்த்து பெருமை தாங்கலை" என்றாள்.
அவனுக்கு அபியை ரொம்பப் பிடிக்கும். கல்லூரியில் ஆங்கிலத்துறை ஹெச்.ஓ.டியாய் இருந்தாலும் என்னை விட சூப்பரா இங்கிலீஷ் பேசுறாடா என்பான்.
"கொஞ்ச நேரம் பழைய கதையெல்லாம் பேசிட்டுப் போனார். உங்களுக்காக வெயிட் பண்ணிப்பார்த்தார். ஆனா பத்து மணிக்கு சேலம் பஸ்ஸாம், அதான் சாப்பிட்டுட்டு கிளம்பிட்டார்"
சேலம் என்றதும் பழைய நினைவுகள் கிளம்பின. ரவியும் நானும் ஸ்கூல் பருவ நண்பர்கள்., காலேஜ் வயதிலேயே அவனுக்கு தலை சொட்டையாகி முடி கொட்டி விட்டதால் பெண் கிடைப்பது தள்ளிப் போனபடியே இருந்தது. ஒரு வழியாய் 34 வயதில் இப்போதுதான் சொந்தத்திலேயே அமைந்திருக்கிறது.
பழைய நண்பர்களைச் சந்திக்கையில் தான் எத்தனையோ நினைவுகள் அலைமோதும்.. ப்ரசன்டேஷன் செய்து கொண்டிருக்கும் போதே கொசுவத்தி சுற்றத்துவங்கியது. சிறு வயது நினைவுகள்.. அப்போதெல்லாம் வீட்டிற்குள் அப்பா வரும்போது எல்லோரும் அடங்கிப் போய் அமர்ந்திருப்போம், அவர் இருக்கும் போது யாரும் பேசியதே இல்லை.
நானும் ரவியும் சின்ன வயதில் சேர்ந்து செய்த அட்டகாசங்கள் அதிகம். செம்பருத்தி பூ, தோட்டம், நாய் துரத்தல்கள், எதிர் கேங்குடன் காவேரி மணலில் சண்டை, சப்பரம், பாதாம் கொட்டை, குரங்கு பெடல், காலரா ஊசி, பதினைஞ்சு பைசா பால் ஐஸ், பாட்டியின் துணி மரப்பெட்டி என எங்கள் அட்டகாசங்களுக்கு சோர்ஸ் கொடுத்த விஷயங்கள் எத்தனையெத்தனை?
"அபி... நாளைக்கு மம்மி, டாடி ரெண்டு பேருமே இருக்க மாட்டோம், யூ வில் ஹேவ் டு ப்ரிபேர் யுவர்செல்ஃப் பார் ஸ்கூல், கோ டு பெட் நெள"
"டூ மினிட்ஸ் மம்மி.."
அபியைத் தூங்க அழைத்துக் கொண்டிருந்த மினுவின் பேச்சினால் என் கவனம் கலைந்தது. இருவரையும் கவனித்தேன்.
பீன் பேக்கில் சாய்ந்து கொண்டு கெலாக்ஸ் சாப்பிட்டபடியே வாரான் வாரான் பூச்சாண்டியும், கில் பில்லும், பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸூம் ரிமோட்டால் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்த அபி கேட்டாள்.
"மம்மி ஒரு டவுட்"
"என்ன?"
"ரைஸ் எங்கருந்து வருது மம்மி?"
-------------------
--------------------
படிச்சாச்சா.........?
அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?
தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?
புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...
புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------
நாளைய தலைமுறை இப்படித்தான் இருக்குமோ?
பதிலளிநீக்கு// பாலா சொன்னது…
பதிலளிநீக்குநாளைய தலைமுறை இப்படித்தான் இருக்குமோ? //
இன்றைய தலைமுறையே இப்படித்தான் இருக்கிறது....
வளரும் இன்றைய தலைமுறையை பெரிதாக சிரத்தை எடுக்காமல் மிக சாதாரணமாக எடுத்து கூறி இருக்கின்றீர்கள்..
பதிலளிநீக்குநானுந்தான் ஒரு கதை எழுதி இருக்கேனே..
படித்து பாருங்கள்..
நிழலில்லா நிஜங்கள்..!
என்ன சொல்ல வர்றீங்க மனோவி.... புரியலையே?
பதிலளிநீக்குI hope that your way of telling story is much better than mine.
பதிலளிநீக்குThats what I said
இது உங்க சொந்த அனுபவமா...?
பதிலளிநீக்கு// மனோவி சொன்னது…
பதிலளிநீக்குI hope that your way of telling story is much better than mine.
Thats what I said //
ஓஹோ... அப்படியா? நன்றி... ஒன்றுமில்லை... ஒன்றுக்கு ஏழு முறை புரூஃப் பார்த்து திருத்துவேன்... உங்கள் கதையையும் படித்து விட்டு கருத்துக்கூறுகிறேன்..
// Philosophy Prabhakaran சொன்னது…
பதிலளிநீக்குஇது உங்க சொந்த அனுபவமா...? //
சொந்த அனுபவம்தான்.. ஆனால் மேலே உள்ளபடி அப்படியே அல்ல.. கடைசி வரி மட்டும் தான்.. ஒரு டிரெயினிங்குக்காக சென்னையில் ஒரு பள்ளிக்கு போயிருந்தபோது அங்கிருந்த ஒரு மாணவன் கேட்டது.. அதை வைத்து புனையப்பட்ட கதை.. எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலீங்கோவ்....
பாஸ் எப்போ அடுத்த பதிவு?
பதிலளிநீக்கு