திங்கள், 3 மே, 2021

பத்மஸ்ரீ விவேக்

பத்மஸ்ரீ விவேக் - மறைவின் போது அவருக்கு ஒரு ட்ரிப்யூட் வீடியோ போடலாம் என்று எங்க டீம் முடிவெடுத்தோம். அதற்காக நான் எழுதிய ஸ்க்ரிப்ட் இது.

அந்த வீடியோ லிங்க் இது
------------------------------------------------------------------------------
நகைச்சுவை நடிகர் திரு விவேக் அவர்களுடைய மறைவு திரைப்படத்துறைக்கு மட்டுமில்லீங்க நம்மளைப் போல சாதாரண மக்களுக்கும் ஒரு மிகப்பெரிய இழப்புதான் ஏன்னா நம்ம தினசரி வாழ்க்கையில நமக்கு இருக்குற ஆயிரம் பிரச்சனைகளையும் தாண்டி மனதுக்கு சந்தோஷம் தரக்கூடியவை சினிமாவுல வருகிற காமெடி காட்சிகள்தான் நமக்கு எவ்வளவு சோகங்கள் இருந்தாலும் நாம அதை மறந்து கொஞ்ச நேரம் சந்தோஷமாய் இருக்கக் காரணமே காமெடி நடிகர்கள் தான். அப்படி நம்ம தமிழ் சினிமால கிட்டத்தட்ட மூன்றாவது தலைமுறையாக நடிச்சிகிட்டு இருந்தவர் தான் நம்ம "சனங்களின் கலைஞன்" விவேக் அவர்கள்.



வெறும் நகைச்சுவை நடிகர் என்பதையும் தாண்டி எத்தனையோ படங்களில் சிறப்பாக நடிச்சிருக்காரு அவர். பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார். இந்த வீடியோவில் நடிகர் விவேக் வாங்கிய விருதுகள் பற்றிதான் பாக்கப் போறோம்
நம்ம எல்லாரும் அவரை செல்லமா சின்னக் கலைவாணர் னு கூப்பிடுவோம் இல்லையா? அதற்குப் பொருத்தமா 2006-ம் ஆண்டு தமிழக அரசு திரைப்படத்துறைக்கு விவேக் அளித்த பங்களிப்பைப் பாராட்டி "கலைவாணர்" அவார்டையே வழங்கி அவரை கெளரவிச்சிருக்காங்க தெரியுமா?
அதுமட்டுமில்லாம சிறந்த நகைச்சுவை நடிகராக தமிழக அரசின் விருதை 5 முறை வாங்கியிருக்கார் அவர்.
முதன் முறையா 1999 ஆம் ஆண்டுல வெளிவந்த "உன்னருகே நானிருந்தால்" படத்துக்காக தமிழக அரசுடைய சிறந்த நகைச்சுவை நடிக்கருக்கான விருது அவருக்குக் கிடைச்சது. தொடர்ந்து, 2002 ல ரன் படத்துக்காகவும், அதுக்கு அடுத்த வருஷமே அதாவது 2003 ல வெளியான பார்த்திபன் கனவு படத்திற்காகவும் தொடர்ந்து அவார்டு வாங்கினார்.
பிறகு 2005 ல வந்த அந்நியன் படத்துக்காகவும், 2007 ல் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியோட சேந்து அவரு பட்டையைக் கிளப்பின "சிவாஜி" படத்துக்காகவும் அவருக்கு தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.
தமிழக விருதுகள் மட்டும் இல்லாமல் தேசிய தமிழ் திரைப்பட விருதுகளில் கூட அவர் சிறந்த காமெடியன் விருதை நான்கு முறை வாங்கியிருக்கிறார். ரன், சாமி, குருவி, வெடி படங்களுக்காக அவருக்கு இந்த விருதுகள் கிடைத்தன.
சினிமாவுக்கு வழங்கப்படக்கூடிய பெரிய விருதுகள்ல ஒன்னான ஃபிலிம்பேர் விருதைக்கூட அவர் விட்டு வைக்கலங்க. அதையும் ஒரு முறை இரண்டு முறை இல்ல 4 முறை வாங்கியிருக்காரு விவேக்.. அதில மூணு வருடங்கள் வரிசையா அவரே வாங்கினார். ரன் படத்திற்க்காக 2002 லயும் அடுத்த வருடமே 2003 ல சாமி படத்துக்காகவும், 2004 ல் வந்த பேரழகன் படத்திற்காகவும் வாங்கினார். ஒரு சின்ன கேப் விட்டு, 2007ம் ஆண்டு சிவாஜி படத்துக்காக நான்காவது முறையா சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை பிலிம்பேர் கிட்ட இருந்து வாங்கினார் விவேக்
நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாம “படிக்காதவன்” படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அது போக "குரு என் ஆளு" படத்துக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான எடிசன் விருது, வேறு சில படங்களுக்காக ஏசியா நெட் திரைப்பட விருது, ஐடிஎஃப் ஏ விருதுகள் அப்படின்னு பல விருதுகளை வாங்கிக் குவிச்சிருக்காருங்க.
இவை எல்லாத்துக்கும் மேல 2009ஆம் ஆண்டு இந்திய அரசு விருதுகளில்ல மிகப் பெரிய விருதான பத்மஸ்ரீ அவார்டையும் வாங்கியிருக்கார். அதனால தான் அவருடைய படங்கள்ல பத்மஸ்ரீ விவேக் அப்படின்னு டைட்டில் கார்டுல போட்டிருப்பாங்க.
அப்பேர்ப்பட்ட ஒரு கலைஞனுடைய இழப்பு உண்மையிலேயே ஈடு கட்ட முடியாத ஒரு சோகம் தான். ஆனா அவர் நம்மை விட்டுப் போகலை. அவருடைய சினிமாக்கள் மூலமும், அவர் நட்டு வச்சிட்டுப் போன ஆயிரக்கணக்கான மரங்கள் மூலமாவும் நம்ம கூட வாழ்ந்து கிட்டே தான் இருப்பாரு.
மறுபடியும் இன்னோரு வீடியோவுல மீண்டும் சந்திக்கலாம். நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக