வியாழன், 9 செப்டம்பர், 2021

ஆன்லைன் வகுப்பில் இப்படியெல்லாமா நடக்குது?

#Activity_Based_learning  

#Real_Life_Examples 

3rd Std EVS - Online Classroom Observation செய்து கொண்டிருந்தேன். 



டீச்சர் போனை எடுத்துக் கொண்டு நேராக தோட்டத்திற்குச் சென்றார். ஒரு இலையைப் பறித்து அதைக் கேமராவில் காட்டி ஒவ்வொரு பாகமாகத் தொட்டுக் காட்டி "இது என்ன?" என்று கேட்கிறார். பிள்ளைகள் ஒவ்வொன்றாக பதில் சொல்கிறார்கள். அதிலிருந்து அப்படியே Photosynthesis - ஒளிச்சேர்க்கை டாபிக்கைத் தொட்டு நடத்தத் துவங்குகிறார். ஆர்வமாக கவனிக்கிறார்கள் குழந்தைகள் 

(ஒரு பையனின் தந்தை பின்னால் துண்டுடன் க்ராஸ் செய்கிறார். கேமரா ஆஃப் பண்ணு என்று சொல்லியிருப்பார் போல. ஓக்கே என்று தலையாட்டியபடி கேமராவை ஆஃப் செய்கிறான் அவன்)

Photosynthesis க்காக ஒரு வீடியோ போட்டுக்காண்பித்தார். அதைப்பார்த்து முடித்ததும் ஒரு பயல் நேயர் விருப்பம் போல "வேற வீடியோ போடுங்க மிஸ்" என்கிறான். 

Sunlight, Chrolophyl, Carbon Dioxide, Water என்று சொல்லும் போது குழந்தைகள் திரும்பச் சொல்கிறார்கள். ஒரு குழந்தை Chrolophyl ஐ "கோலோபில்" என்றது. அழகாக இருந்தது. 

இதுபோலக் குழந்தைகளுடன் கிடைக்கும் நேரத்திற்காகவே இந்தத்துறையை விட்டு இன்னும் விலகாமல் இருக்கிறேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக