
ஆனந்த விகடன் இணைய தளம் மதுரை இளைஞர் கிருஷ்ணன் பற்றிய ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. இதோ அதில் இருந்து சில பாராக்கள்.
-----------------------------
மதுரை இளைஞர் கிருஷ்ணன்... சி.என்.என். (CNN) தேர்ந்தெடுத்துள்ள உலகின் சிறந்த 10 மனிதர்களுள் ஒருவர்.
சமூக அக்கறை, நம்பிக்கை, விடா முயற்சி இவற்றை மட்டுமே மூலாதாரமாகக் கொண்டு இந்தப் பூமியில் மாற்றத்தைக் கொண்டு வர முனைந்து செயல்படுவோரைக் கண்டறிந்து, ஆண்டுதோறும் சிறந்த மனிதர்களை உலகுக்கு அடையாளம் காட்டி வரும் திட்டமே 'சி.என்.என். ஹீரோஸஸ்'.
இதில், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 10 மனிதர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர், தமிழரான கிருஷ்ணன். (இவர், முதலிடம் பெறுவது உங்கள் கையில் - விவரம் கீழே)
தனி மனிதர் ஒருவருக்கு உணவில்லாதபோது, அவரது வயிற்றுச் சோறிட்டு வருபவர் இவர்.
கிருஷ்ணனை 2005 ஆம் ஆண்டே வாசகர்களுக்கு அடையாளம் காட்டியது விகடன். அவரது சமூகப் பணியின் ஆரம்பகட்ட நிலை குறித்து ஜூலை 31, 2005 தேதியிட்ட ஜூனியர் விகடனில் வெளிவந்த செய்திக் கட்டுரை இதோ ஒரு ஃப்ளாஷ்பேக்காக...
-----------------------------------------------

இது "நேசம் கிருஷ்ணன்... உன்னத மனிதருக்கு உலக அங்கீகாரம்!" என்ற தலைப்பில் ஆனந்த விகடன் வெளியிட்ட அந்தக் குறிப்பிட்ட கட்டுரையின் லிங்க்
http://www.vikatan.com/news/news.asp?artid=5281
-----------------------------------------------
இது குறித்து அன்பர் ஜாக்கி சேகர் வெளியிட்டுள்ள பதிவின் லிங்க்
http://www.jackiesekar.com/2010/10/1803102010_24.html
-----------------------------------------------
இன்னும் சில வரிகள் அதே விகடன் கட்டுரையில் இருந்து
----------------------------------------------
உலகின் சிறந்த 10 மனிதர்களைத் தெரிவு செய்துள்ள சி.என்.என்., அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து 'சி.என்.என். ஹீரோ ஆஃப் தி இயர்' என்ற கெளரவத்தை அளிக்க இணையத்தில் வாக்கெடுப்பு நடத்தி வருகிறது.
சி.என்.என். தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றதால் இப்போது 25,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றால், கிருஷ்ணனுக்கு 1,00,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். அது, அவரது கனவுத் திட்டத்துக்கு உறுதுணை புரியலாம்.
இந்திய இணையவாசிகள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தாலே கிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதி!
----------------------------------------------
நீங்க யாரோ எவரோ, உங்களுக்கு என்னை தெரியுமோ தெரியாதோ, எனக்குத் தெரிந்தவரோ தெரியாதவரோ யாராக இருந்தாலும் பரவாயில்லை. தயவு செய்து ஒரு ஓட்டுப்போடுங்கள். ரெண்டே நிமிடம் தான் ஆகும். உங்களுக்குத் தெரிந்த பெரியவர்கள் யாராவது கூட இதன் மூலம் உதவப்படலாம் இல்லையா?
மற்ற பதிவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். ஒவ்வொரு பதிவருக்கும் பல ஃபாலோயர்கள் உண்டு. உங்களை நம்பி நூற்றுக்கணக்கான முறை பக்கங்கள் திறக்கப்படுகின்றன. இது குறித்த ஒரு பதிவு வெளியிட்டால் இது இன்னும் பலரையும் போய்ச்சேரும். ஏதோ நம்மால் முடிந்த வரை தலைக்கு நூறு பேரை ஓட்டுப் போட வைக்கலாம் இல்லையா?
1,00,000 டாலர்கள் என்றால் நம்ம ஊர் மதிப்பில் சுமார் 43 அல்லது 44 இலட்சம் ரூபாய் வரும். அதை வைத்து இன்னும் எவ்வளவு பேருக்கு உதவி செய்யலாம்? நமக்கு என்ன கஷ்டமான வேலை? ஒரே ஒரு ஓட்டு தானே?
----------------------------------------------
நீங்கள் ஓட்டுப்போட வேண்டிய சி.என்.என் இணையத்தின் லிங்க் இது.
http://heroes.cnn.com/vote.aspx
நவம்பர் 18-ம் தேதிவரை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
இதே டாப் டென் லிஸ்டில் என்னுடைய அடுத்த சாய்ஸ் "அனுராதா கொய்ராலா".
-----------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
-----------------------------------
good thing
பதிலளிநீக்குநல்ல பகிர்வு நண்பரே
பதிலளிநீக்குநன்றி திரு.வினோ... ஓட்டு போட்டீர்களா?
பதிலளிநீக்குஇந்த மாதிரி நல்ல விஷயம்லாம் நம்மளால எறங்கிப்பண்ண முடியலை.. என்ன ஒரு ஓட்டு தானே போட்டாச்சு. கிருஷ்ணனுக்கு மட்டுமில்ல.. உங்களுக்கும் தான்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குபெயரில்லா பெரிய மனிதர்கள் இருவருக்கும் நன்றிகள் பல...
பதிலளிநீக்குஓட்டுப் போட்டுட்டேன்..!! நல்ல பதிவு..!!
பதிலளிநீக்குரொம்ப நல்ல விஷயம் சகோ...இவரை பற்றி நான் வேறு ஒரு தளத்திலும் படித்தேன் ....அங்கே வோட் பண்ணினேன்....தெரிந்தவர்களுக்கு லிங்க் அனுப்பி இருக்கிறேன்....பதிவு ஒன்றும் போடலாம் என்று இருக்கிறேன்....நன்றி
பதிலளிநீக்குநன்றிடா தேவா.. நீயும் ஒரு பதிவு போடேன்....
பதிலளிநீக்குநன்றி கெளசல்யா... நாராயணன் கிருஷ்ணன் பற்றிய பல மெயில்கள் வலம் வரத் துவங்கி விட்டன. பல பதிவர்கள் பதிவுகள் போடத் துவங்கி விட்டார்கள். நீங்களும் ஒரு பதிவு போடுங்களேன். உங்கள் பதிவுகளைப்பார்த்தேன். இன்ட்லியில் ஏகப்பட்ட ஓட்டுகள் வாங்கியிருக்கிறீர்கள்... எனவே உங்கள் பதிவைப் படிப்பவர்கள் பலரும் ஓட்டுகள் போடுவார்கள்....
பதிலளிநீக்கு