செவ்வாய், 26 அக்டோபர், 2010

தலைப்பு இல்ல

இந்தக்கொடுமையை நான் எங்க சார் போய் சொல்லுவேன்? இந்த மாதிரி இந்த மாதிரி பிட்டு பிட்டா பதிவு எழுதி வச்சிகிட்டு, இதுங்களுக்கு பொதுவா ஒரு பேரு வைக்கலாமே, நாளப்பின்ன திரும்பவும் எழுதும் போது தலைப்பு தேவைப்படுமேன்னு பாத்தா ஒரு பொதுத் தலைப்பு கிடைக்கவே மாட்டேங்குது... மிக்சர், நொறுக்கல், வாந்தி, குப்பைத்தொட்டி அப்படி இப்படின்னு எல்லாம் அரை மணிநேரத்துக்கும் மேலா யோசிச்சு யோசிச்சு ஒவ்வொரு பேரா கூகுளடிச்சுப்பாத்தா எல்லா பேருலயும் ப்ளாக்கு இருக்குது. என்ன கொடுமை சார் இது? புள்ளைக்குப் பேரு வைக்க முடியலையே....















-----------------------------------
தலைப்புக்காக கட்டுரை எழுதுவது, கருத்து சொல்ல பதிவு எழுதுவது, சமுதாயத்தை முன்னேற்றுவதற்காக எழுதுவது (?) எல்லாம் போக பிட்டு பிட்டாக "கற்றதும் பெற்றதும்" மாதிரி மனதில் என்னவெல்லாம் தோன்றுகிறதோ (ஹோய், ஹோய், ஹோய், ரொம்ப பேசாதடா டேய்) அதை அப்படியே கொட்டப் போகும் இடம் தான் இந்த குப்பைத்தொட்டி (அ) வாந்தி (அ) மிக்சர் (அ) நொறுக்கல் (அ) புது பேரு வைப்போம்.. இப்போதைக்கு "தலைப்பு இல்ல" ன்னு வச்சுக்கலாம்.
-----------------------------------

சி.என்.என் ஹீரோஸ் பட்டியலில் சேர்ந்துள்ள திரு.நாராயணன் கிருஷ்ணன் பற்றிய பதிவை எழுதிய பிறகு எனக்கு புதிதாய் இரண்டு ஃபாலேயார்கள் கிடைத்துள்ளார்கள். சந்தோஷமாக இருக்கிறது. வெறும் 13 ஃபாலேயார்கள் வைத்துக்கொண்டு ஏண்டா இந்த பில்ட் அப் என்கிறீர்களா? நான் ஒன்றும் பிரபல பதிவர் கிடையாது. ஏதோ ஒரு டைரி எழுதுவது போல எழுதிக்கொண்டிருக்கிறேன். டைரியைப்பொதுவில் வைப்பதால் டீசன்டாக எழுத வேண்டும் என்று கும்மி அடிக்காமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். மெயில் மூலமாக வரும் கடிதங்களுக்கு மெயில் மூலமாகவே பதில் அனுப்பி விடுகிறேன். வேலை அதிகமாக இருப்பதன் காரணமாக மற்றவர்களின் பதிவுக்கு பின்னூட்டமும் போடுவதில்லை, பதிவுகள் எழுதவே நேரம் கிடைப்பதில்லை. அதையும் மீறி ஒன்றிரண்டு பதிவுகள் எழுத முயற்சிக்கிறேன். அப்படி எழுதும் போது ஃபாலோயர்கள் எண்ணிக்கை அதிகமானால் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது.

-----------------------------------

இந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை காலபந்துபோட்டியின் போது, காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி உள்பட 8 போட்டிகளின் முடிவுகளை துல்லியமாக கணித்துக் கூறியதால் உலகம் முழுவதும் காலபந்து ரசிகர்களிடையே மிகுந்த பிரபலம் அடைந்தத ஆக்டோபஸ் பால் இறந்து போய்விட்டதாம். ஒரு டவுட்டு - தான் எப்போது இறக்கப் போகிறோம் என்று அதற்குத் தெரிந்திருக்குமோ?

-----------------------------------

திடீர்னு தோணிய ஒரு கவிதை (மாதிரி)

அவள் என்னருகில்
இல்லையென்றால் என்ன?
அவள் நினைவுகளும்,
அவள் புகைப்படமும்,
காதுகளில் ரீங்கரிக்கும்
அவள் குரலோசையும்
எனக்குப்போதும்.

- இது யாரைப்பற்றி இருக்கும்னு சொல்லுங்க பாக்கலாம்?

-----------------------------------

நம்ம கம்பேனி இஸ்கூலுக்கெல்லாம் டிஜிட்டல் பாடம் குடுக்குற கம்பேனி. டீச்சருங்க பசங்களுக்கு பாடம் சொல்லித்தர்றதுக்காக.. டிஜிட்டல் பாடமா? அப்படின்னா எப்பிடி?

புரியுற மாதிரி சிம்பிளா சொல்றேன். நாமள்லாம் படிக்க சொல்லோ எப்டி படிச்சோம். பிரிண்ட் அடிச்ச புக்குல இருக்குறதை, கலர் கூட இல்லாம, படம் கூட இல்லாம படிச்சோம். அந்தப்பாடம் எல்லாம் விஷூவலா இருந்தா எப்படி இருக்கும்னு யோசிங்க.. அதாவது ஹார்ட் பீட்டு, சாணக்யா, அசோகா, ட்ரயாங்கிள், எர்த் குவேக்கு, அந்தக் காலத்து கோவில்கள், ராஜாக்கள், கிட்னி, தவக்காளையை குப்புற போட்டு அறுக்குறது, கடல் தண்ணியில இருந்து உப்பு எடுக்குறது, எல்.கே.ஜி ரைம்ஸூ... அப்டி இப்டின்னு எல்லா பாடமும்...

அதுவும் கிளாஸ் ரூமுக்குள்ள எல்லா பசங்களும் பாக்குற மாதிரி பெருசா, அதுவும் டீச்சரோட ஒயிட் போர்டுல, அதுவும் அங்கங்க ஃப்ரீஸ் செஞ்சு அது மேல டிஜிட்டல் மார்க்கரால நோட் பண்ணி நோட் பண்ணி சொல்லிக்குடுக்குற மாதிரி.. எப்படி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க... அதான் டிஜிட்டல் பாடம்.

அதுக்காக ஒரு புது இஸ்கூலுல டீச்சருங்களை ஒக்கார வச்சி ஒரு டெமோ எடுத்துகிட்டு இருந்தேன். கூட்டத்துல ஒரு சின்னப்பய உக்காந்திருந்தான். (சின்னப்பய சாவகாசம் ஆகாதுங்கறது சரியா தான் இருக்கு) சரி, சும்மா இருக்கானே அவனுக்கு ஒரு ரைம்ஸ் போட்டுக்காமிக்கலாமேன்னு "ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்" போட்டு விட்டேன். ஆ-ன்னு பாத்துட்டே இருந்த பயபுள்ள திடீர்னு (விவேக்கு கிட்ட வையாபுரி கேக்குற மாதிரி) கேட்டான்யா ஒரு கேள்வி "மாமா இதுல சுட்டி டி.வி வருமான்னு".

நான் "பே"ன்னு முழிச்சுட்டு நிக்க கும்பலே என்னைப்பார்த்து சிரிச்சுது.

இது எனக்குத் தேவையா?

-----------------------------------

அப்புறம் எனக்கு வந்த ஒரு எஸ்ஸெம்மெஸ்ஸூ

செல்போனைக்கண்டு பிடிச்சவன் வேணும்னா இங்கிலீஸ் காரனா இருக்கலாம். ஆனா மிஸ்டு காலை கண்டு பிடிச்சவன் தமிளன்...டா......

-----------------------------------

அப்புறம் இன்னோரு எஸ்ஸெம்மெஸ்ஸூ நம்ம டாகுடரு பத்தி...

விஜய் என்பது யார்?
எவன்(ர்) ஒருவன்(ர்) தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்த ஒரு படத்தை கர்ச்சீஃப் கலர் கூட மாற்றாமல் தமிழில் எடுத்து ப்ளாப் ஆக்குகிறானோ அவனே(ரே) விஜய் என்பவன்(ர்) ஆவான்(ர்).

-----------------------------------
படித்தாயிற்றா? ஒரு உதவி பண்ணுங்கள்? என்ன உதவியா? உங்களை நான் என்ன கேட்கப்போகிறேன். இன்ட்லியில் ஒரே ஒரு ஓட்டு, அவ்ளோதான். நன்றி.
-----------------------------------

6 கருத்துகள்:

  1. விஜய் காமெடி கலக்கல் ... அப்பறம் அந்த ஆக்டோபசுக்கு எனது இரங்கல்கள் ...

    பதிலளிநீக்கு
  2. ஆக்டோபஸ்ஸூக்கு எதுக்குங்க இரங்கல்? அதான் போய் சேந்துடுச்சே.. அதோட ஓனருக்குல்ல இரங்கல் சொல்லணும்? வந்ததுக்கு நன்றி. அப்படியே ஒரு தலைப்பு சொன்னீங்கன்னா நல்லாருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. அருமை நண்பரே காமெடி அழகு, தொடர்ந்து எழுதுங்கள்.

    நன்றி... தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. "பலவட்டறை" நல்லாத்தான் இருக்கு

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கு நன்றி திரு.கமல்...

    பதிலளிநீக்கு
  6. பலவட்டறை என்றால் என்ன?

    "பலவட்டறை என்பது திட்டும் வார்த்தையாக உபயோகித்து அறிந்து இருக்கிறேன்" என்று tamilnadutalk.com ல் வரும் "வெண்ணை திருடி கிருஷ்ணன் கதை"-யில் படித்தேன்.

    பதிலளிநீக்கு