வெள்ளி, 12 நவம்பர், 2021

சூரரைப் போற்று - கின்டிலில் கோபிநாத்

சூரரைப் போற்று படம் ஒரு பக்கம்.

சில மாதங்கள் முன்பே, இந்தப் படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத் - உடைய (திரைப்பட சுவாரஸ்யத்திற்காகபுனைவுகள் சேர்க்கப்பட்ட) வாழ்க்கை வரலாறு என்று கேள்விப்பட்டதும் அவருடைய "வானமே எல்லை" புத்தகத்தைத் தரவிறக்கிப் படித்தேன். கின்டிலில் கிடைக்கிறது. Simply fly - A deccan Odyssey என்ற பெயரில் அவர் எழுதிய ஆங்கில மூலத்தின் தமிழாக்கம்.
"அன்ப்ரெடிக்டட் லைஃப்" என்று சொல்வார்களே அதற்கு பக்கா உதாரணம் இவருடைய கதை. எந்த ஒரு தொழிலதிபரும் என் நிறுவனத்திற்காக பெரும் ரிஸ்க் எடுத்தேன் என்றெல்லாம் சொல்வார்கள். அந்த ரிஸ்க்கையெல்லாம் தூக்கி ரஸ்க்கு மாதிரி சாப்பிட்டவர் இவர். ஒரே வாழ்க்கையில் ஒரு மிலிட்டரி மேனாக ஒரு வாழ்க்கை, ஒரு விவசாயியாக ஒரு வாழ்க்கை, ஒரு விமான நிறுவன அதிபராக ஒரு வாழ்க்கை எனக் கிட்டத்தட்ட நான்கு விதமான வாழ்க்கைகளை வாழ்ந்திருக்கிறார்.
படத்தை விடுங்கள். வணிகக் காரணங்களுக்காக நிறைய காம்ப்ரமைஸ் செய்து தான் எடுத்திருப்பார்கள். அல்லது, அட் லீஸ்ட் நேரம் காரணமாக நிறைய விஷயங்கள் குறைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், விருப்பமும் நேரமும் இருந்தால் கேப்டன் கோபிநாத்தின் புத்தகத்தைத் தரவிறக்கிப் படியுங்கள். அதுவும் ஒரு தொழில் முனைவோராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.


உங்கள் மனம் சோர்வு அடையும் போது "என்னைப்பாருப்பா" என்று உங்கள் மனக்கண்ணில் கோபிநாத் வந்து நிற்பார்.
பிற்சேர்க்கை - இப் பதிவை ஒரு மூவி குரூப்பில் போட்டதும், வதவதவென்று "பி.டி.எஃப் அனுப்புங்க", "பி.டி.எஃப் அனுப்புங்க", என்று கமெண்ட்களில் ஏகப்பட்ட கோரிக்கைகள். அதில் சிலர் "பி.டி.எஃப் அப்லோட் செய்யப்பட்ட வெப் சைட்டுகள் உள்ள ஏதோ லிங்குகளையும் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இது போக எனக்கு இன்பாக்ஸ் கோரிக்கைகளும் வந்தன. என்னிடம் பி.டி.எஃப் இல்லை. கின்டில் மூலம் படித்தேன் என்றதும் ஏமாற்றம் அவர்களுக்கு.

12 நவம்பர் 2020 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக