28 மார்ச் 2016 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.
கிரிக்கெட் ஆர்வலர்கள் கோபிக்க வேண்டாம். எனது மனதில் பட்டதைப் பதிவிடுகிறேன்.
1. கிரிக்கெட்டை பிஸினஸாக்கி வருஷம் பூரா ஆடுறாங்களே. ஆடுறவங்களை விடுங்க. பார்க்கிறவங்களுக்கு போரடிக்காதா? இது கேஷூவலாகக் கேட்டது. யாரையும் கேலி செய்ய அல்ல.
2. கிரிக்கெட்டை சூதாட்டம் என்று சொல்லவில்லை. பிஸினஸ் என்கிறேன். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் ஒவ்வொரு பொருளுக்கு பிராண்ட் அம்பாஸிடராகி கோடியில் வாங்கும் சம்பளம் அந்தப் பொருளின் விலையில் தானே ஏறுகிறது? பூஸ்ட் - க்கு சச்சின் ஓக்கே. ஆமரான் பேட்டரிக்கு எதற்கு சச்சின்?
3. ஒரு மிடில் கிளாஸ் குடும்பஸ்தன் என்ற முறையில் பல பொருட்களின் விலைகளை கவனித்து வருகிறேன். எப்போது ஒரு வி.ஐ.பி அதன் பிராண்ட் அம்பாஸிடராக ஆகிறாரோ அதன் விலை கன்னாபின்னாவென்று ஏறுகிறது. 15 ரூபாய் பொருள் 20 ரூபாய் ஆகிறது. 33 சதம் திடீர் உயர்வு. விளம்பரத்தால் ஈர்க்கப்பட்ட மக்கள் தந்திரம் தெரியாமல் வாங்குகிறார்கள். சிறிய தொகை தானே என்று. 15 இலட்ச ரூபாய் கார் திடீரென 20 இலட்சம் ஆனால்? அப்போது அது பெரிய தொகையாக வித்தியாசம் தெரிகிறது.
4. நான் ஒரு கோக் குடிகாரன். கோக் 600 மி.லி 25 ரூபாயில் இருந்து திடீரென ஒரு ஓவர் நைட்டில் 10 ரூ ஏறியது. 40 சதம் விலை உயர்வு. (அந்த அளவுக்கு நம் வருமானம் ஏறுகிறதா? நோ) கன்ஸ்யூமர்கள் யாரும் கேள்வி கேட்கவில்லை. கேட்க முடியாது. மே பி, சில விநியோகஸ்தர்கள் கேட்டிருக்கலாம். ஆனால் முறைப்பு தான் பதிலாகக் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். எந்த தைரியத்தில் ஏற்றுகிறார்கள்?
5. நிஜமாகவே (கேஷூவலாக) கேட்கிறேன். வருடம் ஒருமுறை அல்லது மூன்று நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வேர்ல்டு கப் நடந்த போது இருந்த த்ரில் வருடத்துக்கு இரண்டு மூன்று முறை நடக்கும் போது இருக்கிறதா?
6. எனக்கு குழம்பி விடுகிறது. மாதம் ஒரு முறை அக்கம் பக்கத்தில் கொண்டாட்டச் சத்தங்கள் கேட்கிறது. என்னவென்று கேட்டால் ஏதோ ஒரு வேர்ல்டு கப் என்கிறார்கள். அப்போ போன மாதம் வந்தது என்னவென்றால், அது வேற கப், இது வேற கப் என்கிறார்கள். எனக்கு நிஜமாகவே குழம்பி விடுகிறது.
7. இப்போது கூட ஒரு 2020 வேர்ல்டு கப் நடக்கிறது. அடுத்த மாதம் விவோ ஐ.பி.எல் துவங்குகிறது என்று விளம்பரம் போடுகிறார்கள். ஙேஙேஙேஙேஙேஙேஙேஙேஙே?
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக