வெள்ளி, 29 ஜனவரி, 2021

முன்முடிவுகளுடன் அணுகக் கூடாது


29 ஜனவரி 2016 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது

எந்த ஒரு விஷயத்தையும் பார்த்த உடன் முன்முடிவுகளுடன் அணுகக் கூடாது என்பது அனுபவ வாக்கு. ஒரு நிகழ்வை பார்த்த உடன் முடிவெடுப்பது பாமரர் பழக்கம்.

2012 ல் மாதவன், ஆர்யா நடித்து வெளிவந்த வேட்டை படத்தில் மாதவன் குண்டாக பொதபொதவென்று இருக்கிறார். சார்மிங் போச்சு என்று அப்போதைய விமர்சனத்தில் பலரும் குறிப்பிட்டிருந்தார்கள். அதுவும் தன் உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்கும் ஆர்யாவுக்கு அண்ணனாக என்றதும் "அவ்ளோ தான், எந்த ஒரு பிரபல ஹீரோவும் மார்க்கெட் முடியும் நேரத்தில், அதுவும் டபுள் ஹீரோ சப்ஜெக்டில், அத்தி பூத்தார்ப் போல் கொடுக்கும் ஹிட் இந்த வேட்டை" என்றும் ஒருவர் எழுதியிருந்தார்.
ஆனால் அதை மீறி நான்கு ஹிட் படங்களை ஹிந்தியில், அதிலும் ஒன்றாக இந்தியாவின் டாப் டென் கலெக்ஷனில் இடம் பிடித்த "தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்" என்றொரு மகா மெகா ஹிட்டைக் கொடுத்தார் அவர்.
வேட்டை படத்தின் ரிலீஸ் தேதி 2012 ஜனவரி 14. "இறுதிச் சுற்று" இயக்குனர் 2011 செப்டம்பரிலேயே மாதவனுக்குக் கதை சொன்னதாக விகடன் விமர்சனம் குறிப்பிட்டிருக்கிறது. இந்தப் படத்துக்காக மாதவன் 3 ஆண்டுகளாகத் தயார் ஆனார் என்று மற்றொரு செய்தி சொல்கிறது. பாக்ஸிங் கோச்சுகள் இப்படித்தான் பல்க் ஆக இருப்பார்கள் என்று ஹோம்வொர்க் செய்து (பெசன்ட் நகர் ரவி நினைவிருக்கிறதா? சிங்கம் 1 படத்தில் சூர்யாவுடன் தியேட்டரில் மோதுவாரே) தயார் ஆனதாக மாதவன் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். இப்போது புரிகிறதா "வேட்டை" படத்தில் மாதவனின் பொதபொத உடம்பின் ரகசியம்?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக