திங்கள், 10 பிப்ரவரி, 2020

லவ் லெட்டர் - காதலர் தினத்தை முன்னிட்டு

2015 பிப் 8 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.

லவ் லெட்டர் -

காதலர் தினத்தை முன்னிட்டு (லாம் எழுதவில்லை). காக்கா உக்கார கேஸ் தான். நான் போன மாதம் அனுப்பினேன். அது சரியாக சிச்சுவேஷன் பார்த்து வெளியாகியுள்ளது. ஆசிரியர் குழுவுக்கு தான் ஸ்பெஷல் தேங்க்ஸ். அச்சில் வந்த என் முதல் சிறுகதை / குட்டிக் கதை / ஒரு பக்கக் கதை / குறுங்கதை எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். என் படைப்பை அங்கீகரித்து வெளியிட்ட குங்குமத்திற்கு கோடி நன்றிகள்.

பிலிம் நியூஸூக்கு ஒரு ஆனந்தன் ஐயா மாதிரி சிறு எழுத்தாளர்களுக்கு ஒரு நா. கோகிலன் நம்முடைய எந்தப்படைப்பு எந்தப் புத்தகத்தில் வந்தாலும், அந்தப் புத்தகத்தை நாம் வாங்காமல் விட்டிருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. கோகிலன் உள்பெட்டியில் ஸ்கேன் காப்பி அனுப்பியிருப்பார். விடியும் போதே நம் மொபைலில் க்ளிங் என்று ஒரு மெஸேஜ் வந்து நிற்கும். என் பல ஜோக்குகளை நான் பார்க்கும் முன்பே, வாங்கும் முன்பே இன்பாக்ஸில் கொண்டு வந்து போட்டுவிட்டுப் போயிருக்கிறார் எந்தப் பிரதிபலனும் பாராமல். இத்தனைக்கும் அவர் எனக்கு நேரடி நண்பரில்லை. முகநூலில் தான் பழக்கம் அதுவும் வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் அவர்கள் மூலமாகத் தான் அறிமுகம்.

அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

ஒரு பக்கக் கதைகள் என்றாலே பால்ராசய்யா ராசய்யா அவர்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். நூற்றுக்கணக்கான ஒரு பக்கக் கதைகள் எழுதிய எழுத்தாளர் அவர். ஒரு காலத்தில் அவரது பெயரை மட்டும் அடிக்கடி பார்ப்பேன். ஆனால் பின்னாளில் அவரையே நேரில் சந்திப்போம். தினசரி ஃபேஸ்புக்கில் அளவளாவுவோம் என்றெல்லாம் நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஒரு கதையை எப்படி எழுத வேண்டும் எனத் துவங்கி பல குறிப்புகள் கொடுத்திருக்கிறார். நான் இப்போது ஒரு பக்கக் கதைகள் எழுதுவதற்கு அவரும் ஒரு காரணம். நான் ஏகலைவன், அவர் துரோணாச்சாரியார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக