ஞாயிறு, 14 ஜூன், 2020

மூஞ்சூறுப்பிள்ளையார் - ஓவியம்




சில நூற்றாண்டுகளுக்கு முன்னால், கல்லூரிக்காலத்தில் வரைந்தது. அப்போதெல்லாம் ஸ்கெட்ச் பென் மட்டும் வைத்து வரைவேன். அப்படி, ஒரு காலண்டரில் இருந்த பிள்ளையார் படத்தைப் பார்த்து வரைந்தது. ஐ திங்க், மூன்று மணி நேரம் ஆனது என்று நினைக்கிறேன். பெரிய வெள்ளை சார்ட் பேப்பர் வாங்கி அதில் கால்வாசி பாகத்தில் வரைந்த படம் - டிரங்குப்பொட்டியின் கல்லூரிக்கால அட்டை ஃபைலின் கீழடியில் கிடந்தது.

பிள்ளையார் படங்கள் வரைவதென்றால் அவ்வளவு இஷ்டம். அப்படி மிகுந்த மனமகிழ்ச்சியோடு வரைந்த படம் இது. படத்தின் கீழே கையெழுத்து போடுவதெல்லாம் பிடிக்காது. அதை நண்பர்களுக்குக் காட்டலாம் என்று எடுத்துப் போனால், அதை வாங்கி "வேண்டாம்டா" என்று சொல்வதற்குள் நண்பன் Karthik Kr டக்கென்று பேரை எழுதிவிட்டான். அவன் கையெழுத்தில் என்பெயர் கீழே.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக