28 மே 2020 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.
"அடுத்த மாற்றம் என்ன?" என்பதை நோக்கி அனைத்துத்துறைகளும் நகர்வது வழக்கமே. அதை நோக்கித்தான் பயணம் இருக்க வேண்டும். "ஆன்லைன் மூலம் கல்வி" என்பது கல்வித்துறையின் அடுத்த மாற்றமாக இருக்கலாம். அது "வீட்டிலேயே கல்வி" என்றும் மாறலாம், "community schooling (பள்ளிக்குப் போகாமல் ஒரு குழுவாக இணைந்து கற்றல்)", குறை நாட்களுக்கான ஆப்ஷனல் பள்ளிகள் (வருடம் 220 நாட்களுக்குப் பதிலாக 100 நாட்கள் மட்டும் பள்ளிக்குப் போய்விட்டு, மீதி நாட்களில் தனக்குப் பிடித்த மற்ற ஸ்கில்களைக் கற்பது), இவையெல்லாம் அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வுக்கான பரிசோதனைகள். இதில் எது வெற்றி பெறும் என்பதைக் காலமும் தேவையுமே தீர்மானிக்கும்.
இந்த ஆன்லைன் கல்வியை வெறுமனே "ஏழைகள் பட்னி கெடக்காங்க, ராக்கெட் விடுவது அவசியமா?" என்று திருக்குறள் சிவக்குமார் (அவங்க ராக்கெட் விட்டதால தான் இன்டர்நெட் வந்து, அதன் மூலமா உங்க மருமக படம்லாம் OTT ல ரிலீஸ் ஆகுது சாரே) சொன்னது போல "ஆன்லைன் கல்வி என்பது பணக்காரர்களுக்கானது" என்ற ஒரு வட்டத்திற்குள் அடக்கி "ஏழைகள் - பணக்காரர்கள் - நீட் - தனியார் பள்ளிகள் - அரசுப் பள்ளிகள் - கம்யூனிஸம் - இட ஒதுக்கீடு" என்று எதெதையோ ரவுண்டி கட்டி அபத்தமாக அடித்துக் கொண்டிருக்கிறார்கள் பலர்.
இதே போல ஓலைச்சுவடி முறையில் இருந்து முதன் முதலாக புத்தகம் அச்சிடப்பட்டு பிள்ளைகள் கையில் தரப்பட்ட போது பெற்றோர் என்ன சொல்லியிருப்பார்கள் என்று யோசித்துக் கொள்ளவும்.
குருகுலக் கல்வி முறையில் பல ஆண்டுகள் ஆசிரியர் வீட்டிலேயே மாணவர்கள் இருந்த முறை மாறி, பள்ளி எனும் கட்டிடம் முளைத்த போது அப்போதைய பெற்றோர் என்ன சொல்லியிருப்பார்கள்?
அதே குருகுலக் கல்வி முறையில் ஒரே ஆசிரியர் எல்லாப்பாடத்திற்கும் எனும் முறையில் இருந்து ஒரு பாடத்துக்கு ஒரு வாத்தி என்ற முறை வந்த போது?
ஸ்மார்ட் க்ளாஸ் வந்த போது, பசங்க கண்ணு கெட்டுப்போயிடும் என்று பயப்பட்ட பெற்றோர் தான் அதிகம். ஆனால் உண்மையில் புரொஜெக்டர் வெளிச்சம் சுவரில் திரையில் பட்டு, அந்த ரிஃப்ளெக்ஷனைத்தான் பிள்ளைகள் பார்த்தார்கள். சூரியனை நேரடியாகப் பார்ப்பதும், தரையில் விழும் அதன் வெளிச்சத்தைப் பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டல்லவா? அது போல.
ஆனால் அதே பெற்றோர் நேரடியாக ரேடியேஷனுடன் கண்ணில் படும் டி.வியை தம் வீட்டுப்பிள்ளைகள் ஏழடி தள்ளிப் பார்க்காமல், நாலடி அருகிலேயே நாளொன்றுக்கு 6 மணி நேரம் பார்த்தார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள்.
பெரிய டாபிக். பேசிக்கொண்டே போகலாம்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக