ஞாயிறு, 14 ஜூன், 2020

ஓவியர் ஸ்யாமும் நானும் - 2



பத்திரிகைகள் படிக்கிற பழக்கம் உங்களுக்கு இருந்தால் இது யாருடைய ஓவியம் என்று புரிந்திருக்கும். ஒரிஜினலைச் சொன்னேன், இந்த சுமாரான படம் நான் வரைந்தது ஒரிஜினலைப்பார்த்து.


ஓவியர் திரு. Shyam Sankar ற்றி திரு. Srinivasan Uppili அவர்கள் தொடர் பதிவுகள் போட்டதைப் பார்த்து பல நாஸ்டால்ஜிக் ஃபீலிங்ஸ் கிளம்ப நானும் ஸ்யாம் பற்றி சென்ற வாரம் ஒரு பதிவு போட்டிருந்தேன். அதில், சிறு வயதில் நானும் ஸ்யாமின் ஓவியங்களை பார்த்து அப்படியே வரைய முயற்சித்திருக்கிறேன் என்று சொல்லியிருந்தேன்.

அதை நிரூபிக்க வேண்டி, இன்று காலை முதல் என் மெமரீஸ் "டிரங்குப் பொட்டி" யைப் புரட்டிப் போட்டுத் தேடியதில் அதில் ஒன்றே ஒன்று கிடைத்தது. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு முன்பு வரைந்த இதோ அது. "96 ராம்" மாதிரி வேற ஏதாவது சிக்குமான்னு தங்கமணி அப்பப்போ எட்டிப்பார்த்து என் தோளில் மூச்சு விட்டது தனிக்கதை.

ஸ்கெட்ச் பேனாக்களில் மட்டுமே வரைந்து கொண்டிருந்த நான், இந்தப் படத்துக்காக கேம்லின் வாட்டர் கலர் கருப்பு நிறம் ஒன்றும் (15 ஓவா அப்போ, இப்போ விலை மிகக்குறைவு), ஒரு பிரஷ் ஒன்றும் (5 ஓவா) வாங்கி வந்து வரைந்தது. அதனால் வளைவுகள் வரையத் தடுமாறினேன். படத்தில் பார்த்தால் அது தெரியும். அப்போதைய சின்ன சைஸ் விகடனில் வந்தது இந்தப் படம் என்று நினைக்கிறேன். அந்த மழமழப்பான தாளில் பார்த்த அந்த ஓவியம் இன்னும் நினைவில் இருக்கிறது.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக