செவ்வாய், 30 ஜூன், 2020

மரம் வைக்க ஆசை



30 ஜூன் 2015 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது 

இத்தனை நாள் மண் ரோடாக இருந்த வீட்டு வாசலில் உள்ள சின்ன தெருவில் தார் ரோடு போடும் வேல கனஜோராக நடக்கிறது. ஒரு பெரிய தெருவில் இருந்து பிரியும் சின்ன தெரு உள்ள இடத்தில் எங்களது ஆல்மோஸ்ட் கார்னர் வீடு. ஒன்று ஆல்ரெடி தார் ரோடு, ஒன்று மண்.
.
ப்ரீ ப்ரொடக்ஷன் வேலை மட்டுமே ஒன்றரை மாதமாக நடக்கிறது. பொக்லைனால் மண் ரோட்டை கொத்தி விரவி விட ஒரு நாள். ரோடு போடும் முன் கோடு போடவும் அரசு அளவைத்தாண்டி கட்டியிருக்கும் படிகளையும், வண்டி ஏற்றும் சரிவுகளையும் இடிக்க ஒரு நாள், செம்மண் கொண்டு வந்து கொட்ட ஒரு நாள். அதை விரவி விட ஒரு நாள். அதன் மேல் நீருற்றி அழுந்தி விட வைக்க ஒரு நாள். ஒன்றரை ஜல்லி கொண்டு வந்து கொட்ட ஒரு நாள், அதை விரவி விட்டு ரோலர் ஏற்றி சமப்படுத்த ஒரு நாள், எல்லா வேலைக்கும் நடுவில் ஸ்ட்ராடஜிக் டைம் அவுட் போல இரண்டிரண்டு நாட்கள், இதே ஸ்டைலில் மற்ற ஏழெட்டு தெருக்களுக்கும் வேலை நடப்பதால் அதில் சில நாட்கள், ஆளுக வந்தாச்சு ஆனா பொக்லைன் கான்ட்ராக்டர் வரல (பேமேண்ட் டிலேவாம்) என்று ஒரு நாள் என்று பக்கா ப்ளானில் வேலை நடக்கிறது (இதை குறை சொல்லும் பதிவு அல்ல, பெரிய வேலை அதுவும் அரசு வேலை என்றால் கொஞ்சம் டிலே ஆகத்தான் செய்யும்). அடுத்து அரை ஜல்லி, அதை சமப்படுத்தல், தார் ஊற்றி ஓட்டுதல், அதை அழுந்த வைத்தல், பொடி போட்டு விரவுதல், ஸ்பீடு பிரேக்கர் ஏதேனும் வைத்தல் என 6 கட்ட வேலை பாக்கி இருக்கிறது. எப்படியும் இன்னொரு மாதம் ஓடும்.
.
ரோடு வரும் அளவைக் குறித்து கோடு போட்டதும், கிட்டத்தட்ட இரு புறமும் இரண்டரை அடி மண் ரோடு விடப்பட்டிருக்கிறது. அதாவது வீட்டுவாசலுக்கும், தார் ரோட்டுக்கும் உள்ள கேப். தெருவில் நான்கைந்து மரம் வைத்தால் என்னவென்று திடீர் ஆசை எனக்கு. நமக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு, நாம வச்சோம்னு ஒரு சந்தோஷம். என்ன பண்லாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
.
செடி வைத்தால் ஆடும், மாடும் தின்று விடும். கொஞ்சம் வளர்ந்து மரமாகிக் கொண்டிருக்கும் செடி நடுவதற்குச் செலவாகும், கிடைக்குமிடம் விசாரிக்க வேண்டும், ரோட்டோரம் நிழலுக்காக மட்டுமே வைப்பதால் என்ன மரம் வைப்பது என்று விசாரிக்க வேண்டும், வைத்த பிறகு பராமரிப்புக்கு நேரம் ஒதுக்க வேண்டும், கொஞ்சம் பணமும் செலவு செய்ய வேண்டும், மரம் நடுமுன் அங்குள்ள வீட்டுக்காரர்களிடம் பர்மிஷன் வாங்க வேண்டுமா, கவுன்சிலரைக் கண்டு பேச வேண்டுமா என்று விசாரிக்க வேண்டும், தோண்ட, மூட, தண்ணி ஊற்ற, ஏற்கனவே உள்ள களைகள் வெட்ட கருவிகள் வாங்க வேண்டும்.
.
இந்த பிராக்டிகல் பிரச்சினைகளை சமாளித்து விட்டால் ஒரு நல்ல விஷயம் செய்யலாம். பார்க்கலாம்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக