ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை சுர்ஜித் விழுந்த சம்பவம் நடந்த நேரத்தில் - 27 அக்டோபர் 2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது.
-----------------------------------------------------------------------------------------
சீரியஸ் முன்குறிப்பு - எந்தப் பாவமும் செய்யாத குழந்தை சுர்ஜித் மீண்டு வர நானும் பிரார்த்திக்கிறேன்.
-----------------------------------------------------------------------------------------
"குழியில் விழுந்த சுர்ஜித்தைக் காப்பாத்த கருவி இல்லை. ராக்கெட் விடுறாங்களாமாம். என்ன டிஜிட்டல் இந்தியா? ஆய். ஊய். டாய். டூய்"
என்று கருத்தாழம் மிக்க பதிவுகள், ஃபார்வர்டுகள் பல கண்ணில் பட்டன. வாட்ஸ் அப்பிலும் வந்தன.
அந்தப் பையன் சுர்ஜித் பற்றிய செய்தி நமக்கு எப்படி தெரிந்தது? சாட்டிலைட் டி.வி மூலமா, அல்லது செல்ஃபோன் மூலமா.. செல்ஃபோன், இன்டர்நெட்லாம் எப்படி வேலை செய்யும்? சாட்டிலைட் மூலமா. அந்த சேட்டிலைட் எப்படி அங்க போகும்? ராக்கெட் விட்டாத்தான் போகும்.
டீடெய்லா போஸ்ட் போடுற அளவுக்குப் பொறுமை இல்ல. விவேக் சொன்ன மாதிரி ஹண்ட்ரண்ட் அப்துல் கலாம்ஸ் (அது பெரியாராச்சேன்னு யாரும் வராதீங்க) வந்தாலும் உங்களத் திருத்த முடியாது.
கொஞ்சமாவது யோசிங்க அறிவாளிகளே. எதுக்கு எதை இணைச்சுப் பேசணும்னு ஒரு விவஸ்தை இல்லை? சொம்மா உணர்ச்சிக்கு அடிமையாகி "ராக்கெட் விடுற காசை ஏழைகளுக்கு தயிர் சாதம் வாங்கித் தரலாம்"னு மைக்கப் பாத்ததும் உளர்ற நம்ம ஓவியர் சி.கு மாதிரி கத்தக் கூடாது.
போய் சர்க்கார், வில்லு, வேட்டைக்காரன், பிகில் னு வரிசையா பாருங்க. அதான் உங்களுக்கெல்லாம் கடைசி வரை தலைவிதி.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக