ஒரு முறை ஒரு பள்ளி விழாவிற்கு ஆபீஸ் நண்பரையும் என்னையும் கூப்பிட்டிருந்தார்கள். விழாவில் நாங்கள் பணி புரிந்த நிறுவன புராடக்ட் பற்றிப் பேச வேண்டும் என்றார்கள். சரின்னாச்சு. ஆனா விழா நெருங்க நெருங்க ஓவர் பில்டப்பு. நீங்க கோட்டு போட்டுட்டு வாங்க, 20 நிமிஷம் பேசுறதுக்கு PPT குடுங்க, அஜெண்டா குடுங்கன்னு, வீடியோவை மெயில் அனுப்புங்கன்னு ஒரே டார்ச்சரு. நண்பர் எதாச்சும் கேட்டா, "ரிட்டயர்டு ஜட்ஜ்ஜூ வாராரு, நீயா நானா கோபி வாராரு நீங்க மட்டும் கேள்வி கேக்குறீங்க"ன்னு பதில் வந்துச்சு. நண்பர் நம்மள விட ஸ்டிரெயிட் ஃபார்வர்டு.
கடுப்பான அவரு, ரிட்டயர்ஜூ ஜட்ஜூ சும்மா இருப்பாரு அதனால வருவாரு. எனக்கு கம்பெனி இல்லையா? வேலை இல்லையா? மீட்டிங் இருக்குன்னு கத்தி விட்டாரு. கூடவே, யாருய்யா அந்த கோபி ன்னாரு. (நண்பர் டி.வியே பாக்க மாட்டார், சினிமாவும் கிடையாது. ஆங்கிலப் புத்தகங்கள் மட்டுமே) நான் நம்ம கோட்டு கோபி பத்தி சொன்னதும், அவன் கோட்டு போட்டா என்ன டேஷூக்கு நான் கோட்டு போட்டு வரணும்னாரு. நாயந்தேன். அவரு வி.ஐ.பி வேறங்க, ஒரு விழாவுக்கு வருகை புரிய சன்மானம் வேற வச்சாகணும்ற தகவலையும் எடுத்து விட்டேன். எவ்ளோன்னு (தெரிஞ்சிக்க, உள்டப்பி) கேட்ட மனுசன் அதுக்கும் மேல இன்னும் டென்ஷனாயிட்டாரு.
அந்தாளு சன்மானமா வாங்குற காசுக்கு தான் நான் இந்த ஸ்கூலுக்கு என் மொத்த புராடக்டையே வித்துருக்கேன். இந்த டேஷ் மவன் (இது ஸ்கூல் ஆளை) காசு வாங்கிட்டு வர்றவங்களுக்கு மரியாதை தரான். கைக்காசை செலவு பண்ணிட்டு வர என்னைய நொய்யி, நொய்யிங்கிறான். இது ஆள் பத்தலன்னு கொற வேற.
கோபி வர்றதால ஸ்கூலுக்கு என்ன பிரயோஜனம்? என் புராடக்டை யூஸ் பண்ணாலாவது பசங்களுக்கு நாலெட்ஜ் இம்ப்ரூவ் ஆகும். இவனுங்க விளம்பர சீனுக்கு என்னை அஜென்டா அனுப்பு, கஜன்டா அனுப்புன்னு சாவடிக்கிறாங்களான்னு ஒரே சவுண்டு. பேயாட ஆரம்பிச்சிட்டாரு. எல்லாம் நாயந்தான். விழா முடியட்டும். அமைதியா உக்காந்து பேசுவோம்னு சொல்லி.......
கூட இருந்த மார்க்கெட்டிங் மேனேஜரோட இவரை டாஸ்மாக் அனுப்பி வச்சு அவரைக் கூல் பண்றதுக்குள்ள பெரும்பாடாயிடுச்சு.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக